அணையில் எடுத்த ஆபாச வீடியோ: பிரபல நடிகை கைது!

  • IndiaGlitz, [Thursday,November 05 2020]

கோவா மாநிலத்தில் உள்ள அணை ஒன்றில் ஆபாச வீடியோ எடுத்ததாக பிரபல நடிகை ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

நடிகை பூனம் பாண்டே சமீபத்தில் சாம் பாம்பே என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் திருமணத்திற்குப் பின்னர் திடீரென தனது கணவர் மீது பாலியல் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார் என்பதும் தெரிந்ததே. மேலும் அவர் தனது கணவருடன் சமாதானம் ஆகிவிட்டதாகவும் கூறப்பட்டது

திருமணத்திற்கு முன்னரும் திருமணத்திற்கு பின்னரும் பூனம் பாண்டே தொடர்ந்து தனது சமூக வலைதளப் பக்கங்களில் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வந்தார். அவரது பதிவுக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு இருந்தது

இந்த நிலையில் கோவாவில் ஆபாச வீடியோ எடுத்ததாக அம்மாநில போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. சமீபத்தில் சாம் பாம்பே என்பவரைத் திருமணம் செய்துகொண்ட பூனம் பாண்டே தேனிலவுக்காக கணவருடன் கோவா சென்றதாகவும், கோவாவில் உள்ள நீர்த்தேக்கம் ஒன்றில் நின்று கொண்டு ஒவ்வொரு ஆடைகளாக களைந்து நிர்வாணமாக போஸ் கொடுப்பது போன்ற வீடியோ எடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து இருந்ததாகவும் தெரிகிறது

இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த வீடியோவுக்கு பலர் கண்டனம் தெரிவித்ததோடு அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் அரசுக்கு சொந்தமான இடத்தில் ஆபாச படம் எடுத்ததாக பூனம் பாண்டே மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் அடிப்படையில் பூனம் பாண்டே கைதாகலாம் என்று ஏற்கனவே கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரிடம் போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 

More News

காஜல் அகர்வாலின் காதல் முத்தம்: காட்டுத்தீ போல் வைரலாகும் லிப்லாக்!

பிரபல நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் கவுதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பது தெரிந்ததே. திருமணத்திற்கு முன்னரும் திருமணத்திற்கு

கேப்டன் சம்யுக்தாவை கூப்பிட்டு வார்னிங் செய்த பிக்பாஸ்! என்ன காரணம்?

பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் சண்டை சச்சரவுடன் சென்றாலும் இடையிடையே ரொமான்ஸ், நகைச்சுவை என சுவாரஸியமாக சென்று கொண்டிருப்பதால்

நடிகை ஸ்ரேயா வீட்டில் விசேஷம்: ரசிகர்கள் வாழ்த்து!

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் 'சிவாஜி' தளபதி விஜய்யுடன் 'அழகிய தமிழ் மகன்' விக்ரமுடன் 'கந்தசாமி' உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் நடிகை ஸ்ரேயா சரண்

'வலிமை' படத்தில் அஜித் கேரக்டர்: டிரெண்டான ஹேஷ்டேக்

தல அஜித் நடித்துவரும் 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பதும் நேற்று முதல் அஜித் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார் என்ற செய்தி வந்ததையும் பார்த்தோம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேனா? இந்திராஜா அளித்த விளக்கம்

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஒரு மாதமாக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் ஏற்கனவே அர்ச்சனா மற்றும் சுசித்ரா ஆகிய இரண்டு வைல்ட்கார்ட் போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்