புரட்சியாளர்களையும் மதிக்காவிட்டாலும் பரவாயில்லை, மிதிக்காதீர்கள்: விஜய் பட ரீமேக் குறித்து பிரபல நடிகை..!

  • IndiaGlitz, [Friday,May 12 2023]

விஜய் நடித்த சூப்பர்ஹிட் படத்தின் தெலுங்கு ரீமேக் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த போஸ்டரை பார்த்த நடிகை ஒருவர் புரட்சியாளர்களை உங்களால் மதிக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை, அவர்களை மிதிக்காதீர்கள் என தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’உஸ்தாத் பகத்சிங்’. ஹரி ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்த படம் விஜய் நடித்த ’தெறி’ படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடப்பட்டது. தேவி ஸ்ரீபிரசாத் இசையில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்திய நிலையில் நடிகை பூனம் கௌர் இந்த படத்தின் போஸ்டருக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார். இந்த போஸ்டரில் பவன் கல்யாண் கால்களுக்கு கீழே பகத்சிங் பெயர் உள்ளதை சுட்டிக்காட்டிய அவர், ‘சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கை அவமதிக்கும் செயல் என்றும் புரட்சியாளர்களை உங்களால் மதிக்க முடியாத போதிலும், அவர்களை மிதிக்காமல் இருங்கள் என்றும் பதிவு செய்துள்ளார். இந்த போஸ்டரில் பகத்சிங் பெயரை காலுக்கு கீழே வைத்து அவமானப்படுத்தியது தெரியாமல் நடந்ததா அல்லது வேண்டுமென்றே செய்யப்பட்டதா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்

இதனை அடுத்து பவன் கல்யாண் ரசிகர்கள் நடிகை பூனம் கெளருக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.