நீச்சல் குளத்தில் பூஜா குமாரின் செம்ம ஜாலியான வீடியோ.. உடன் இருப்பது யார்ன்னு பாருங்க..!

  • IndiaGlitz, [Thursday,July 27 2023]

உலகநாயகன் கமல்ஹாசனின் ’விஸ்வரூபம்’ உள்பட ஒரு சில தமிழ் திரைப்படங்களில் நடித்த நடிகை பூஜா குமார் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டரை வயது மகளுடன் நீச்சல் குளத்துடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அமெரிக்காவை பூர்விகமாக கொண்ட பூஜா குமார் கடந்த 2000ஆம் ஆண்டு ’காதல் ரோஜாவே’ என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு அவர் தமிழ் ஆங்கில மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்திருந்த நிலையில் 2013 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடித்த ’விஸ்வரூபம்’ திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தார். அதன் பிறகு ’விஸ்வரூபம் 2’ ’உத்தம வில்லன்’ போன்ற படங்களிலும் நடித்திருந்தார்.


இந்த நிலையில் நடிகை பூஜா குமார், விஷால் ஜோஷி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பூஜா குமார் சற்று முன் தனது இரண்டரை வயது மகள் நீச்சல் குளத்தில் ஜாலியாக விளையாடும் வீடியோவை பதிவு செய்து பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.