நடிகை பூஜா குமாரின் மகளா இவர்? அதற்குள் இவ்வளவு வளர்ந்துவிட்டாரே?
- IndiaGlitz, [Tuesday,February 06 2024]
நடிகை பூஜா குமார் நேற்று முன்தினம் தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் அவர் தனது கணவர் மற்றும் மகளுடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். அதில் உள்ள பூஜா குமாரின் மகளை பார்த்த ரசிகர்கள் அதற்குள் பூஜா குமாரின் மகள் இவ்வளவு வளர்ந்து விட்டாரா என கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்
அமெரிக்காவை சேர்ந்த நடிகை பூஜா குமார், கடந்த 2000ஆம் ஆண்டு வெளியான ’காதல் ரோஜாவே’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இந்த படத்தை அடுத்து அவர் ’மேஜிக் மேஜிக் 3d’ என்ற தமிழ் படத்திலும் சில ஆங்கில படங்களிலும் ஒரு ஹிந்தி படத்திலும் நடித்தார்.
இதையடுத்து கமல்ஹாசனின் ’விஸ்வரூபம்’ திரைப்படத்தின் மூலம் பிரபலமானார் என்பதும் ’விஸ்வரூபம் 2’ படத்திலும் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது .மேலும் கமல்ஹாசன் உடன் அவர் ’உத்தம வில்லன்’ மற்றும் ’மீன் குழம்பும் மண்பானையும்’ போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த விஷால் ஜோஷி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர் அமெரிக்காவில் செட்டில் ஆனார். இந்த தம்பதிக்கு 2020 ஆம் ஆண்டு ஒரு மகள் பிறந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நடிகை பூஜா குமார் தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர். தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி கூறி தனது கணவர் மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படத்தை பூஜா குமார் பதிவு செய்தார். இந்த புகைப்படத்தில் இருந்த அவருடைய நான்கு வயது மகளை பார்த்த ரசிகர்கள் அதற்குள் பூஜா குமாரின் மகள் இவ்வளவு வளர்ந்து விட்டாரா என ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்