வாழ்க்கையில் இரண்டாவது முறையாக பழகுகிறேன்.. பூஜா ஹெக்டே வெளியிட்ட வீடியோ!

  • IndiaGlitz, [Friday,November 25 2022]

நடிகை பூஜா ஹெக்டே வாழ்க்கையில் இரண்டாவது முறையாக நடக்க பழகுகிறேன் என வெளியிட்டுள்ள வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ படத்தின் மூலம் மீண்டும் தமிழ் திரையுலகில் ரீ என்ட்ரியான பூஜா ஹெக்டே, தற்போது தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக இருக்கிறார் என்பதும் பாலிவுட்டிலும் அவர் சில படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் சல்மான் கான் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட விபத்து காரணமாக அவரது காலில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பிறகு வீட்டில் தற்போது ஓய்வு எடுத்து வருகிறார். மேலும் தனது காலில் காயம் ஏற்பட்டுள்ள புகைப்படத்தையும் பதிவு செய்த நிலையில் அவர் விரைவில் குணமடைய ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் தற்போது இரண்டு வார இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடக்க பழகுவதாகவும் வாழ்க்கையில் குழந்தை பருவத்தில் நடக்க பழகி பின்னர் தற்போது இரண்டாவது முறையாக நடக்கப் பழகுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவருடன் இருந்த நர்ஸ் சில பயிற்சிகளைச் சொல்லிக் கொடுக்கும் வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.