13 வருடம் கழித்து குடும்பத்துடன் டூர் சென்ற நடிகை பூஜா ஹெக்டே… எங்கு தெரியுமா?

  • IndiaGlitz, [Friday,February 11 2022]

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வரும் நடிகை பூஜா ஹெக்டே தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்றிருக்கும் புகைப்படம் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம்வரும் நடிகை பூஜா ஹெக்டே தற்போது தளபதி விஜய்யுடன் இணைந்து “பீஸ்ட்“ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தின் டீசர் காட்சிகள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இந்தப் படத்தின் முதல் பாடலான “அரபி குத்து“ பாடல் வரும் காதலர் தினத்திற்கு வெளியாகும் எனப் படக்குழு அறிவித்து இருக்கிறது.

இந்நிலையில் “பீஸ்ட்“ நாயகி பூஜா ஹெக்டே 13 வருடத்திற்குப் பிறகு முதல்முறையாக தனது குடும்பத்துடன் மாலத்தீவுக்குச் சுற்றுலா சென்றுள்ளார். மேலும் இது நீண்ட காலதாமதம் ஆனால் தேவையான ஒன்று எனக்குறிப்பிட்ட அவர் தனது அப்பா, அம்மா, சகோதரர் ஆகியோருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்த சுற்றுலாவின்போது நடிகை பூஜா ஹேக்டே தனது அம்மாவின் பிறந்த நாளையும் கொண்டாட இருக்கிறாராம். சமீபத்தில் தனியாக மாலத்தீவு சென்ற இவர் தற்போது குடும்பத்துடன் சென்றிருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களிடையே பாராட்டை குவித்து இணையத்தில் வைரலாகி வருகின்றன.

More News

சமந்தாவை தொடர்ந்து ஆண்ட்ரியா செய்த மாஸான காரியம்… வைரலாகும் வீடியோ!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் பாடகியாகவும் இருந்துவரும்

காணாமலே போய்விட்டார்… பொல்லார்ட்டை கலாய்த்து தள்ளும் மற்றொரு பிரபலம்!

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னணி வீரர் கிரன் பொல்லார்ட்டை

ஏதோ அவன் சக்திக்கு ரெண்டே ரெண்டு லவ்வர் தான் வச்சிருக்கான்: 'காத்துவாக்குல ரெண்டு காதல் டீசர்!

நடிகர் விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'காத்துவாக்குல ரெண்டு காதல்' திரைப்படத்தின் டீசர் சற்று முன் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

சசிகுமாரின் அடுத்த படத்தில் வில்லனாகும் 'சாத்தான்' விக்ராந்த்: திகில் வீடியோ

இயக்குனரும் நடிகருமான சசிகுமாரின் அடுத்த படத்தில் விக்ராந்த் வில்லனாக நடித்துள்ளதாக வெளிவந்திருக்கும் கிளிம்ப்ஸ் வீடியோ திகிலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

ஜெயம் ரவியின் அடுத்த படத்தில் 2 நாயகிகள்:  அதிகாரபூர்வ அறிவிப்பு!

பிரபல நடிகர் ஜெயம் ரவியின் அடுத்த திரைப்படத்தில் இரண்டு நாயகிகள் என்பதை உறுதி செய்யும் வகையில் சற்று முன் அறிவிப்பு வெளியாகியுள்ளது.