close
Choose your channels

கணவர், குழந்தைகளுடன் பிறந்த நாள் கொண்டாடிய ரோஜா: அசத்தும் புகைப்படங்கள்!

Tuesday, November 17, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 1992ஆம் ஆண்டு ’செம்பருத்தி’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான நடிகை ரோஜா அதன் பின்னர் ’சூரியன்’ ’உழைப்பாளி’ ’வீரா’ ’ராஜமுத்திரை’ ’அசுரன்’ ’மக்களாட்சி’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். கடந்த 90கள் மற்றும் 2000ஆம் ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த ரோஜா, 2002 ஆம் ஆண்டு தன்னை சினிமாவில் அறிமுகப்படுத்திய இயக்குனர் ஆர்கே செல்வமணியை திருமணம் செய்து கொண்டார். இந்த நட்சத்திர தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக ஆந்திர மாநில அரசியலில் ஈடுபட்டு வரும் ரோஜா, நகரி தொகுதியில் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் எம்எல்ஏவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் தற்போது ஆந்திர அரசின் தொழிற்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு கழகத்தின் தலைவராக ரோஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் நடிகையும் அரசியல்வாதியுமான ரோஜா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. தமிழ் தெலுங்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் ரோஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் நமது உளங்கனிந்த பிறந்த நால் வாழ்த்துக்களையும் ரோஜாவுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment