சீரியல் நடிகையை சரக்கடிக்க கூப்பிட்ட தயாரிப்பாளர்.. எல்லை மீறியதாக புகார்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
’ரூமுக்கு வா சரக்கு அடிக்கலாம்’ என தயாரிப்பாளர் அழைத்து தன்னிடம் எல்லை மீறியதாக சீரியல் நடிகை ஒருவர் தயாரிப்பாளர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
”தாரக் மெஹ்தா கா ஊல்டா சஸ்மா”என்ற இந்தி சீரியல் மூலம் புகழ் பெற்றவர் நடிகை ஜெனிபர் மிஸ்டரி பன்சிலால். கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 15 ஆண்டுகளாக இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது என்பதும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த சீரியலின் தயாரிப்பாளர் அசித் குமார் மோடி மீது ஜெனிபர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் ’தயாரிப்பாளர் அசித்குமார் மோடி தன்னை ரூமுக்கு தனியாக சரக்கடிக்க அழைத்ததாகவும் என்னிடம் ஆபாசமாக பேசி எல்லை மீறி நடந்து கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவர் மட்டுமின்றி இந்த சீரியலின் இணை தயாரிப்பாளரும் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் பாலியல் உறவுக்கு உடன் படாவிட்டால் சம்பளத்தை பிடிக்க செய்வோம் என்றும் சீரியல் இருந்து தூக்கி விடுவோம் என்று மிரட்டியதாகவும் அந்த புகாரில் தெரிவித்துள்ளார். இந்த புகார் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தயாரிப்பாளர் அசின் குமார் மோடி நடிகையின் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். ஜெனிபர் சரியாக படப்பிடிப்புக்கு வரவில்லை, அதனால் தான் அவரை சீரியலில் இருந்து தூக்கினோம், வேலை போன விரக்தியில் அவர் தன் மீதும் தனது பட குழுவினர் மீது பொய்யான குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார், அவர் மீது மான நஷ்ட வழக்கு தொடர்வோம் என்று கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com