close
Choose your channels

தமிழ் நடிகை வீட்டில் நடந்த சோகம்: திரையுலகினர் இரங்கல்!

Tuesday, May 4, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த ’ஏகன்’ ஜீவா நடித்த ’கோ’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்த நடிகையின் சகோதரர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அஜித் நடித்த ’ஏகன்’ ஜீவா நடித்த ’கோ’ வெங்கட்பிரபு இயக்கிய ’கோவா’ உள்பட ஒருசில தமிழ் திரைப்படங்களிலும் ஹிந்தி மற்றும் மலையாள திரைப்படங்களிலும் நடித்தவர் நடிகை பியா பாஜ்பாய். இவர் தனது சகோதரர் காலமாகி விட்டதாக தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளதை அடுத்து அவரது ரசிகர்களும் திரையுலகினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கேவி ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடித்த ’கோ’ திரைப்படத்தில் தான் பியா பாஜ்பாய் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்த படத்தின் இயக்குநர் கேவி ஆனந்த் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் தற்போது பியா பாஜ்பாயின் சகோதரரும் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment