எனக்கும் மன அழுத்தம் இருந்தது, இறந்துவிடுவேனோ என பயந்தேன்: பிரபல நடிகை
Send us your feedback to audioarticles@vaarta.com
பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் நேற்று தற்கொலை செய்து கொண்டது இந்திய திரையுலகையே உலுக்கிவிட்டது என்று கூறலாம். 34 வயதில் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்வது என்பது மிகப்பெரிய கொடுமையாக பார்க்கப்படுகிறது. மன அழுத்தம் என்பது கிட்டத்தட்ட அனைவருமே சந்திக்கும் ஒன்றுதான். அந்த மன அழுத்தத்தில் இருந்து வெல்பவர்கள் வெற்றி பெறுகிறார்கள், தோல்வி அடைபவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
இந்த நிலையில் ஐந்து ஆண்டுகளாக தனக்கும் மன அழுத்தம் இருந்தது என்றும் இறந்துவிடுவேனோ என்று பயந்ததாகவும் நடிகை பாயல் கோஷ் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளார். இவர் ‘தேரோடும் வீதியிலே’என்ற தமிழ்ப்படம் உள்பட ஒருசில திரைப்படங்களில் நடித்துள்ளார். தனது மன அழுத்தம் குறித்து நடிகை பாயல்கோஷ் கூறியதாவது:
நான் 2015 முதல் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளேன். நான் மருந்துகளை உட்கொண்டு வருகிறேன். எனக்கும் மரண பயம் உண்டு என்பதை அவ்வப்போது உணர்கிறேன். சில சமயம் இறந்துவிட்டதாக கூட உணர்வேன். அந்த சமயங்களில் உடனே நான் கோகிலாபென் மருத்துவமனைக்கு விரைந்து செல்வேன். ஆனால் இதுபோன்ற தருணங்களில் அதிர்ஷ்டவசமாக எனக்கு எனது குடும்பம், நண்பர்கள் அருகில் இருந்து என்னை காப்பாற்றினார்கள்’ என்று கூறியுள்ளார்.
நடிகை பாயல் கோஷ் நேற்று சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் குறித்து கேள்விப்பட்டதும் ‘ஏன் சுஷாந்த் ஏன்? என்று பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments