close
Choose your channels

அறிமுக நாயகியின் க்யூட் போட்டோஸ்… வியந்து பாராட்டும் ரசிகர்கள்!

Friday, September 24, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் நடிக்க இருக்கும் “ஏஞ்சல்“ எனும் புது திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க இருப்பவர்தான் தெலுங்கு நடிகை பாயல் ராஜ்புத். இந்தப் படம் குறித்த அறிவிப்பு கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகியது. அதைத் தொடர்ந்து பாயல் ராஜ்புத்தின் நடிப்பை தமிழ் ரசிகர்கள் பார்த்தார்களோ, இல்லையோ அவருடைய இன்ஸ்டா பக்கத்தில் உள்ள க்யூட்டான புகைப்படங்களுக்கு தீவிர ரசிகர்களாக மாறிவிட்டனர்.

நடிகை பாயல் ராஜ்புத் பஞ்சாப் மற்றும் இந்தி மொழி தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து பிரபலமானவர். பின்னர் கடந்த 2017 ஆம் ஆண்டு “சன்ன மேரேயே“ எனும் பஞ்சாப் திரைப்படத்தில் நடித்து சினிமா துறைக்குள் நுழைந்தார். பின்னர் 2018 ஆம் ஆண்டு “வீரிய கி வெட்டிங்” எனும் திரைப்படம் மூலம் இந்தி சினிமாவிற்குள் நுழைந்த இவர் தற்போது தெலுங்கு, பஞ்சாபி, இந்தி, தமிழ் எனப்பல மொழி ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்துப்போன ஒரு ஆஸ்தான நடிகையாகவே மாறிவிட்டார்.

அறிமுகமான குறைந்த நாட்களுக்குள் தனது க்யூட் மற்றும் க்ளாமரான நடிப்பால் ரசிகர்களைத் தன்பக்கம் கவர்ந்த இவர் தெலுங்கில் “R×100“ எனும் திரைப்படத்தில் நடித்து தென்னிந்திய ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். அதைத் தொடர்ந்து தெலுங்கில் பல வெற்றிப்படங்களில் நடித்துவரும் இவர் தமிழில் முதல் முறையாக நடிகர் உதயநிதி ஸ்டாலினுடன் ஜோடி போட உள்ளார்.

இந்நிலையில் நடிகை பாயல் ராஜ்புத் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட க்யூட் புகைப்படங்கள் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது. அவரது க்யூட்டான சிரிப்பையும் எக்ஸ்பிரஷனையும் பார்த்த ரசிகர்கள் நடிகை பாயல் ராஜ்புத்தின் புகைப்படத்திற்கு கமெண்டுகளை பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment