திடீரென அரசியலில் குதித்த பிரபல நடிகை: தேடி வந்தது துணைத்தலைவர் பதவி!
- IndiaGlitz, [Monday,October 26 2020]
பிரபல நடிகை ஒருவர் அரசியலில் இணைந்தவுடன் அவருக்கு கட்சியின் மகளிர் அணி துணைத் தலைவர் பதவி தேடி வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது திடீரென பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்தவர் நடிகை பாயல் கோஷ் என்பது தெரிந்ததே அவருடைய குற்றச்சாட்டை அனுராக் காஷ்யப் மறுத்திருந்தார் என்பதும் அவருக்கு ஆதரவாக அவருடைய முதல் மனைவி மற்றும் இரண்டாவது மனைவி ஆகியோர் தங்களது சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டு இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் அனுராக் காஷ்யப் மீது பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை பாயல் கோஷ் திடீரென இன்று இந்திய குடியரசுக் கட்சியில் இணைந்தார்
மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே அவர்களின் கட்சியான இந்த கட்சியில் அவருக்கு மகளிர் அணி துணைத் தலைவர் பதவி தரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை பாயல் கோஷ் அரசியல் கட்சியில் திடீரென இணைந்திருப்பது மட்டுமின்றி அக்கட்சியின் முக்கிய பதவியையும் பெற்று இருப்பது பாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது