கொழுப்பை குறைக்க பிளாஸ்டிக் சர்ஜரி செய்த பிரபல நடிகை பரிதாப பலி!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொழுப்பை குறைப்பதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்த பிரபல நடிகை ஒருவர் பரிதாபமாக பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய நடிகைகள் உள்பட உலகம் முழுவதிலும் உள்ள நடிகைகள் பலர் தங்கள் உடலில் மாற்றம் ஏற்படுத்துவதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி அவ்வப்போது செய்து வருகின்றனர் என்பதும் இதில் தமிழ் நடிகைகளும் அடக்கம் என்பதும் தெரிந்ததே.
இந்தநி லையில் கன்னட திரையுலகின் பிரபல நடிகையாக இருந்த சேத்தனா ராஜ் என்பவர் தனது உடம்பில் உள்ள கொழுப்புகளை குறைப்பதற்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய முடிவு செய்தார். அவருக்கு பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிளாஸ்டிக் சர்ஜரி நடந்த போது திடீரென ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக அவர் பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
பிளாஸ்டிக் சர்ஜரி செய்த டாக்டர்களின் அலட்சியம் தான் நடிகை சேத்தனா ராஜ் உயிரிழப்புக்கு காரணம் என அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments