சூர்யாவை அடுத்து சுற்றுச்சூழல் கொள்கைக்கு எதிராக குரல் கொடுத்த தமிழ் நடிகை!
Send us your feedback to audioarticles@vaarta.com
மத்திய அரசின் புதிய சுற்றுச்சூழல் கொள்கை குறித்து பல விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் சமீபத்தில் நடிகர் சூர்யா மற்றும் நடிகர் கார்த்தி இது குறித்து தங்களது ஆக்கபூர்வமான கருத்தை தெரிவித்தார்கள். அதுமட்டுமின்றி சுற்றுச் சூழல் கொள்கையின் வரைவு ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே இருந்த நிலையில் இதன் தமிழாக்கத்தையும் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் சமூக வலைதளங்களில் வெளியிட்டு இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர் என்பதும் இந்தக் கொள்கை குறித்த கருத்துக்களை அனைவரும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சூர்யா, கார்த்தியை அடுத்து தற்போது நடிகை பார்வதியும் இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழல் 2020 கொள்கைக்கு எதிரான தனது கருத்தை தெரிவிப்பதோடு இது குறித்து அவர் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு ஆங்கிலத்தில் ஒரு கடிதத்தையும் எழுதியுள்ளார்
இந்திய மக்கள் பெரும்பாலானோர் புரிந்துகொள்ள முடியாத ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே இந்த வரைவு வெளியிடுவதற்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ள நடிகை பார்வதி, அனைத்து இந்திய மொழிகளிலும் இதனை மொழிபெயர்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்
கொரோனா வைரஸால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் பெரும்பாலான இந்தியர்கள் புரிந்து கொள்ள முடியாத இந்தி மற்றும் ஆங்கிலத்தில் சுற்றுச்சூழல் வரைவு குறித்த அறிவிப்பை வெளியிட்டு இருப்பது இந்திய மக்களின் மீது அக்கறை இல்லையா என்ற கேள்வியையும் பார்வதி தனது கடிதத்தில் எழுப்பியுள்ளார்.
மேலும் உங்களுக்கு புரியும் வகையில் எனது எதிர்ப்பு கடிதத்தை நான் ஆங்கிலத்தில் எழுதி உள்ளேன் என்றும் அதே போல் மக்களுக்கு புரியும் இந்திய மொழிகளில் இந்த வரைவு அறிவிப்பை நீங்கள் வெளியிட வேண்டும் என்று என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். பார்வதியின் இந்த கடிதம் குறித்த தகவல் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments