இயக்குனராகும் கமல், தனுஷ் பட நடிகை

  • IndiaGlitz, [Saturday,May 30 2020]

கமல்ஹாசன் நடித்த ’உத்தம வில்லன், தனுஷ் நடித்த ’மரியான்’ உள்பட ஒருசில தமிழ் படங்களிலும் ஏராளமான மலையாள படங்களில் நடித்தவர் நடிகை பார்வதி. இவர் தற்போது மலையாளத்தில் பிசியாக நடித்து கொண்டிருந்தாலும், நடிப்புக்கு சிறிது காலம் பிரேக் விட்டு இயக்குனராக உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த கொரோனா விடுமுறை நேரத்தில் இரண்டு திரைக்கதைகள் உருவாக்கி தயாராக வைத்திருப்பதாகவும் லாக்டவுன் முடிந்ததும் படப்பிடிப்பை தொடர உள்ளதாகவும் நடிகை பார்வதி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் இந்த இரண்டு திரைக்கதைகளில் ஒன்று அரசியல் பின்னணி கொண்டது என்றும் இன்னொன்று சைக்காலஜிக்கல் த்ரில்லர் கதையம்சம் கொண்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த இரண்டு படங்களையும் தனது திரையுலக நண்பர் ஒருவருடன் இணைந்து இயக்க இருப்பதாகவும், இதற்கான தயாரிப்பு திட்டங்களையும் தொடங்கி விட்டதாகவும் நடிகை பார்வதி கூறியுள்ளார். மேலும் இந்த கதைக்காக சில ஆய்வுகள் தேவைப்பட்டதாகவும், அந்த பணிகளில் தற்போது ஈடுபட்டு வருவதாகவும் பார்வதி தெரிவித்துள்ளார். இந்திய திரையுலகில் ஏற்கனவே பல பெண் இயக்குனர்கள் சாதனை செய்துள்ள நிலையில் அந்த பட்டியலில் நடிகை பார்வதியும் இணைவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

அமெரிக்கா, WHO வுடன் இருந்த தொடர்பை முறித்துக் கொண்டது!!! அதிரடி அறிவிப்பு வெளியட்ட அதிபர் ட்ரம்ப்!!!

இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இதுவரை உலகச் சுகாதார அமைப்புடன் இருந்து வந்த தொடர்பை அமெரிக்கா துண்டித்துக் கொள்ளும் என்ற அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.

சின்னத்திரை படப்பிடிப்பு: தமிழக முதல்வரின் அதிரடி உத்தரவு

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக சின்னத்திரை மற்றும் பெரியதிரை படப்பிடிப்புகள் முடங்கியுள்ளது என்பது தெரிந்ததே

ஒரே நாளில் சுமார் 8000 பேர்: இந்தியாவில் 1.73 லட்சமாக உயர்ந்து கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த சில நாட்களுக்கு முன் வரை தினமும் ஆயிரம் முதல் இரண்டாயிரம் பேர்கள் வரை கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது

மருத்துவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் போது வேகமாக இறக்கின்றனர்!!! இதற்கு என்ன காரணம்???

பொதுவாக கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் நபரைவிட விட மருத்துவர்கள், செவிலியர்கள்,

கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் 10 வயதுக்கும் கீழான குழந்தைகள்!!! பாகிஸ்தானில் புது நெருக்கடி!!!

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் 10 வயதுக்கும் குறைவான 930 குழந்தைகள், கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது