தனியார் கேப் நிறுவனத்தை கதற வைத்த நடிகை பார்வதிநாயர்

  • IndiaGlitz, [Wednesday,March 14 2018]

என்னை அறிந்தால்', 'உத்தமவில்லன்' உள்பட பல படங்களில் நடித்தவர் நடிகை பார்வதி நாயர். இவர் சமீபத்தில் சென்னைக்கு வந்தபோது தான் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்வதற்காக தனியார் கேப் நிறுவனம் ஒன்றில் ப்ரைம் சேவையில் புக் செய்தார். அவரை பிக்கப் செய்த கேப் டிரைவர் பின்னர் திடீரென ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தி 'நான் வேறு ஒரு கஸ்டமரை பிக்கப் செய்ய வேண்டும், நீங்கள் இறங்குங்கள்' என்று கூறியுள்ளார். ஆனால் பார்வதியோ நான் செல்லுமிடம் இன்னும் வரவில்லை என்று கூறியும் அவரை தகாத வார்த்தையால் பேசியுள்ளார். உடனே நடிகை பார்வதி இதுகுறித்து கஸ்டமர்கேர் எண்ணில் தொடர்பு கொண்டபோது, 'நீங்கள் இறங்கும் இடம் இதுதான்' உடனே இறங்குங்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

இதனால் வேறு வழியின்றி நள்ளிரவில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் இறங்கி பின்னர் தட்டுத்தடுமாறி தான் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றுள்ளார். இதுகுறித்து அவர் உடனே தனது ஆத்திரத்தையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தும் வகையில் டுவிட்டரில் 'சென்னையில் ஓலோ ரொம்ப மோசம். இது செய்தி அல்ல. பிரைம் புக் செய்தது கூட அந்த டிரைவருக்கு தெரியவில்லை. மினி புக் செய்தேன் என்று நினைத்து பாதி வழியில் இறக்கிவிட்டார் என்று பதிவு செய்தார்.

இந்த பதிவு வைரலாகி அந்த தனியார் கேப் நிறுவனத்தை நெட்டிசன்கள் கழுவி ஊற்றினர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நிறுவனம், சம்பந்தப்பட்ட டிரைவரை டிஸ்மிஸ் செய்துவிட்டதாகவும் அந்த டுவீட்டை டெலிட் செய்துவிடுங்கள் என்றும் கதறியது. ஆனால் பார்வதி நாயர் கடைசிவரை அந்த டுவீட்டை நீக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.