சைஸ் என்ன? என கேட்ட ரசிகருக்கு தனது பாணியில் பதில் சொன்ன பார்வதி நாயர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித் நடித்த ’என்னை அறிந்தால்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் பிரபல மலையாள நடிகை பார்வதி நாயர். அந்த படத்தில் அவர் அருண்விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. ’என்னை அறிந்தால்’ படத்தை அடுத்து கமல்ஹாசனின் ’உத்தம வில்லன்’ கீதாஞ்சலி செல்வராகவன் இயக்கிய ‘மாலை நேரத்து மயக்கம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தற்போது அவர் ஆலம்பனா என்ற தமிழ் படத்திலும் ஒரு இந்தி படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமூகவலைதளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் பார்வதி நாயருக்கு இன்ஸ்டாகிராமில் மட்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் சமூக வலைத்தளம் மூலம் ரசிககளிடம் உரையாடியபோது ரசிகர்கள் சில சர்ச்சைக்குரிய கேள்விகள் கேட்டனர் என்பதும் அதற்கு அவர் தனது பாணியில் பதில் அளித்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதில் ஒரு ரசிகர் உங்களுடைய சைஸ் என்ன? என கேட்ட போது எனது ஷூ சைஸ் 37 என்றும் டிரஸ் சைஸ் எஸ் என்றும் அவர் தெரிவித்து பதிலடி செய்துள்ளார். இதேபோன்று பல சர்ச்சை கேள்விகளுக்கு அவர் தனது பாணியில் பதிலளித்துள்ளது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments