நிர்வாண புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட சென்னை நடிகை
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னையில் பிறந்து வளர்ந்து பின்னர் ஹாலிவுட் வரை சென்று நடிகையானவர் நடிகை பத்மா லட்சுமி. இவர் அவ்வப்போது தனது இன்ஸாகிராமில் நிர்வாண, அரை நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது மீண்டும் ஒரு நிர்வாண புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
குளியல் தொட்டி ஒன்றில் நிர்வாணமாக இருக்கும் பத்மா லட்சுமி ஒருசில இடங்களை மட்டும் பீட்சாவை வைத்து மறைத்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களிலும் இணையதளங்களிலும் வைரலாகி பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
நிர்வாணம் குறித்து அவர் ஏற்கனவே கூறியபோது, 'நிர்வாணத்தில் என்ன தவறு உள்ளது? நாம் பிறக்கும்போது நிர்வாணமாகத்தானே பிறந்தோம்' என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல நாவலாசிரியர் சல்மான் ருஷ்டியை திருமணம் செய்து பின்னர் அவரை பிரிந்துவிட்ட நடிகை பத்மாலட்சுமி, ஏற்கனவே குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் புகைப்படம் மற்றும் பல பிகினி புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com