பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்த நடிகை ஓவியா!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரதமர் மோடியின் சமீபத்திய அறிவிப்பு ஒன்றுக்கு நடிகை ஓவியா தனது டுவிட்டர் பக்கத்தில் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்தப்படுவதாகவும் இது பெண்களின் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்புக்கு உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்திருந்தார். பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்தப்படுவதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன என்பதும் ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மிக அரிதாகவே தனது சமூக வலைத்தளத்தில் கருத்து கூறி வரும் நடிகை ஓவியா இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். ‘பெண்ணின் திருமண வயதை உயர்த்துவது மிகவும் சரியான முடிவு என்றும், சிறு வயதிலேயே பல விஷயங்களைத் தியாகம் செய்து மிகப் பெரிய பொறுப்புகளைச் சுமக்கத் தேவையில்லை என்றும், நான் இதை ஆதரிக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். நடிகை ஓவியாவின் இந்த கருத்துக்கு ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் விரைவில் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாக உள்ள பிக்பாஸ் ஓடிடி என்ற நிகழ்ச்சியில் நடிகை ஓவியா கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
Increasing #MarriageAge is a right decision! You don’t need to sacrifice many things and take very big responsibilities at an early age! I strongly support ??
— Oviyaa (@OviyaaSweetz) January 12, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout