'என்னையும் கைது செய்யுங்கள்': நடிகை ஓவியாவின் அதிரடி டுவிட்!

  • IndiaGlitz, [Monday,May 17 2021]

என்னையும் கைது செய்யுங்கள் என நடிகை ஓவியா தனது டுவிட்டரில் டுவிட் ஒன்றை பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பது

தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக இந்தியாவுக்கு பயன்படுத்தவேண்டிய தடுப்பூசியை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்தது ஏன்? என்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அந்த போஸ்டர்கள் ஒட்டியவர்களை காவல்துறை கைது செய்து வருகிறது இதனை அடுத்து ஆவேசமடைந்த காங்கிரஸ் கட்சியின் எம்பி ராகுல் காந்தி அவர்கள் ’என்னையும் கைது செய்யுங்கள்’ என்று ஆவேசமாக டுவிட்டரில் பதிவு செய்தார். இதனை அடுத்து பல பிரபலங்களும் ’என்னையும் கைது செய்யுங்கள்’ என்ற ஹேஷ்டேக்கை தங்கள் டுவிட்டரில் பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்றுமுன் நடிகை ஓவியா ’என்னையும் கைது செய்யுங்கள்’ என்ற ஹேஷ்டேக்கை பதிவு செய்து ’இதுதான் ஜனநாயகமா? என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளார். ஓவியாவின் இந்த டுவிட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே நடிகை ஓவியா பிரதமர் மோடிக்கு எதிராக டுவிட் ஒன்றை பதிவு செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார் என்பது தெரிந்தது.

More News

அருண்ராஜா காமராஜ் மனைவிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய உதயநிதி!

இயக்குனர் மற்றும் பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ் அவர்களும் அவருடைய மனைவி சிந்துஜா அவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த

கொரோனா நிவாரண நிதி: நடிகர் விக்ரம் வழங்கிய தொகை!

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு சிறப்பான முறையில் செய்து வருகிறது.

கொரோனா நேரத்தில் வேலை இழப்பா? நிவாரணம் வாங்குவது குறித்து விளக்கும் வீடியோ!

கடந்த 2019 டிசம்பர் மாதம் ஆரம்பித்த கொரோனா நோய்த் தொற்றினால் பல லட்சக் கணக்கான மக்கள் உலகம் முழுவதும் தங்களது வேலையை இழந்து தவித்து வருகின்றனர்.

கொரோனா Size குறைஞ்சா மனித குலமே இருக்காது? மருத்துவரின் அதிர்ச்சி வீடியோ!

இந்தியாவில் தற்போது இரண்டாவது அலை கொரோனா நோய்த்தொற்று பரவி வருகிறது.

கொரோனா பத்தி சொன்னா பைத்தியக்காரன் மாதிரி பாக்குறாங்க… மனதை உருக்கும் வீடியோ!

கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலையில் தற்போது இந்தியாவே தத்தளித்து வருகிறது.