உடுமலை கெளசல்யாவின் சலூன் கடை.. சொந்த காசில் வந்து திறந்து வைத்த பிரபல நடிகை!
Send us your feedback to audioarticles@vaarta.com
உடுமலைப்பேட்டை கௌசல்யா சலூன் கடையை திறந்து இருக்கும் நிலையில் அந்த கடையை திறப்பதற்காக தனது சொந்த செலவில் வந்து பிரபல நடிகை ஒருவர் திறந்து வைத்துள்ளார்.
உடுமலையில் கௌசல்யாவின் கணவர் சங்கர் ஆணவப்படுகொலை செய்யப்பட்டார் என்பதும் இது குறித்த வழக்கில் கௌசல்யாவின் தந்தைக்கு தூக்கு தண்டனை கிடைத்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் மத்திய அரசின் வேலை கெளசல்யாவுக்கு கிடைத்த நிலையில் அந்த வேலையை உதறிவிட்டு தற்போது உடுமலைப்பேட்டையில் சலூன் கடை வைத்துள்ளார்.
இந்த சலூன் கடையில் வெறும் ஹேர்கட் மட்டுமின்றி ஃபேஸியல் உள்பட அழகு நிலைய வசதியும் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த கடையை பிரபல நடிகை பார்வதி திறந்து வைத்துள்ளார். பொதுவாக ஒரு கடையை திறந்து வைக்க நடிகர் நடிகைகள் பணம் பெறுவது மட்டுமின்றி போக்குவரத்து செலவும் நிறுவனத்தினர் செய்ய வேண்டும். ஆனால் உடுமலை கெளசல்யா தனது சொந்த முயற்சியில் ஒரு புதிய தொழிலை தொடங்கி உள்ளார் என்பதை கேள்விப்பட்டதும் நடிகை பார்வதி ஒரு பைசா கூட பணம் வாங்காமல் தனது சொந்த செலவில் கேரளாவிலிருந்து உடுமலை வந்து கடையை திறந்து வைத்தார்.
மேலும் உடுமலை கௌசல்யாவின் கையை பிடித்துக் கொண்டு ’தைரியமாக பண்ணுங்கள், தொழில் ரீதியாக முன்னேறி வரும் பல பெண்களுக்கு நீங்கள் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதுகுறித்து புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments