பசுவிடம் இருந்து பால் கறந்து டீ போட்டு குடிக்கும் தமிழ் நடிகை: வைரல் வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
பசுவிடமிருந்து பிரஷ்ஷாக பால் கறந்து, அந்த பாலில் டீ போட்டு குடிக்கும் வீடியோ ஒன்றை தமிழ் நடிகை ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
தளபதி விஜய் நடித்த ’குருவி’ என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின்னர் அவர் நடித்த ’ஜில்லா’ திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்தவர் நடிகை நிவேதா தாமஸ். பின்னர் கமல்ஹாசன் மகளாக ’பாபநாசம்’ படத்திலும், ரஜினிகாந்தின் மகளாக ’தர்பார்’ படத்தில் நடித்த நிவேதா தாமஸ், தற்போது இரண்டு தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் நிவேதா தாமஸ்க்கு, இன்ஸ்டாகிராமில் மட்டும் ஐந்து மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும், அவர் பதிவு செய்யும் கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மிக பெரிய அளவில் வைரலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் நிவேதா தாமஸ் பசுவிடமிருந்து பால் கறந்த பாலில் டீ போட்டு குடிக்கும் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். மிக லாவகமாக அவர் பால் கறக்கும் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பதும், இந்த வீடியோவுக்கு சுமார் இரண்டு லட்சம் லைக்ஸ் குவிந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments