அம்மாவிற்குப் பிறந்தநாள்… முதுகில் சுமந்து வாழ்த்துக்கூறி அசத்திய இளம் நடிகை!
Send us your feedback to audioarticles@vaarta.com
குழந்தை நட்சத்திரமாக சினிமா துறையில் அறிமுகமாகி பின்னர் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து தற்போது தென்னிந்திய சினிமாவில் முக்கிய நட்சத்திரமாக வளர்ந்திருப்பவர் நடிகை நிவேதா தாமஸ். இவர் தனது அம்மாவிற்கு வாழ்த்துக்கூறிய புகைப்படம் தற்போது இணையத்தில் பேசப்பட்டு வருகிறது.
கேரளாவை சேர்ந்த நிவேதா தாமஸ் முதலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான சில தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துவந்தார். கடந்த 2011இல் “ப்ரணம்“ எனும் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமான இவர் நடிகர் விஜய்க்கு தங்கையாக “ஜில்லா“ படத்திலும் உலகநாயகன் கமல்ஹாசனுக்கு மகளாக “பாபநாசம்“ திரைப்படத்திலும் கலக்கியிருந்தார்.
இதையடுத்து தற்போது கதாநாயகியாக திரைப்படங்களில் நடித்துவரும் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவிலும் கால்பதித்து இருக்கிறார். தற்போது தெலுங்கில் வெளியாக இருக்கும் “ஷாகினி டாகினி“ திரைப்படத்திலும் இவர் நடித்து முடித்துள்ளார்.
இப்படி பிசியாக சினிமாவில் நடித்துவரும் நடிகை நிவேதா தாமஸ் தற்போது தனது அம்மாவின் பிறந்த நாளுக்கு அவரை முதுகில் சுமந்து வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார். மேலும் எல்லையில்லாத உனது அன்பிற்கு நன்றி என அவர் பதிவிட்டு இருக்கும் கேப்ஷன் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com