ஏ.ஆர்.ரஹ்மான் பாடலை இசைத்து, பாடி கலக்கு நிவேதா தாமஸ்: வைரல் வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நிவேதா தாமஸ் இசைப்புயல் ஏஆர் ரஹ்மானின் பாடலை இசைத்து பாடிய வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
விஜய் நடித்த ’குருவி’ என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நிவேதா தாமஸ் அதன்பின் ’போராளி’ ’ஜில்லா’ உள்பட பல படங்களில் நடித்தார். இருப்பினும் கமல்ஹாசன் நடித்த ’பாபநாசம்’ திரைப்படத்தின் தான் அவர் ரசிகர்களின் மனதில் இடம் பெற்றார் என்பதும் அதன் பின் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ’தர்பார்’ படத்தில் அவரது மகளாக நடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் நிவேதா தாமஸ் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார் என்று தெரிந்தது. அந்த வகையில் சமீபத்தில் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் ஏஆர் ரஹ்மான் பாலிவுட் திரைப்படம் ஒன்றுக்காக கம்போஸ் செய்த பாடலை இசைத்து பாடியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.
lekin raat ke baadh he tho savera hota hai ?? pic.twitter.com/r0e7cUPqqe
— Nivetha Thomas (@i_nivethathomas) June 29, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com