கொரோனா பாதிப்புடன் தியேட்டருக்கு சென்றாரா பிரபல தமிழ் நடிகை? அவரே அளித்த விளக்கம்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகின் பிரபல நடிகை ஒருவர் கொரனோ பாதிப்புடன் திரையரங்கு சென்று அவர் நடித்த படம் பார்த்ததாக புகைப்படங்களுடன் கூடிய செய்தி வெளியானதையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து அவர் இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் விளக்கமளித்துள்ளார்
அஜித் நடித்த ’நேர்கொண்ட பார்வை’ என்ற திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் திரைப்படமான ’வக்கீல் சாகேப்’ என்ற திரைப்படம் சமீபத்தில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் வெளியானது. இந்தப் படத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது என்பதும் அஜித் நடித்த கேரக்டரில் பவன்கல்யாண் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் பாதிக்கப்பட்ட மூன்று பெண்களாக அஞ்சலி, நிவேதா தாமஸ் மற்றும் சுருதிஹாசன் நடித்து இருந்தனர்
இந்த நிலையில் இந்த படத்தில் நடித்த நிவேதா தாமஸ் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் திரையரங்கில் ’வக்கீல் சாகேப்’ படத்தை பார்ப்பது போன்று சமூக வலைதளங்களில் புகைப்படம் வைரலானது. கொரோனா பாதிப்பிலிருந்த அவர் எப்படி திரையரங்கிற்கு செல்லலாம் என்றும் அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் புகார் அளித்தனர்
இதுகுறித்து தனது விளக்கத்தை கொடுத்த நிவேதா தாமஸ் ’நான் திரைப்படம் பார்க்கும் போது எனக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றும், எப்போதும் நான் பொறுப்பில்லாமல் நடந்து கொள்ள மாட்டேன் என்றும், நான் பாதுகாப்பாக தான் இருக்கிறேன்’ என்று கூறி விளக்கம் அளித்துள்ளார்.
I live for these moments...
— Nivetha Thomas (@i_nivethathomas) April 10, 2021
Maatalu levu ♥️#VakeelSaab pic.twitter.com/vFWzdWJYHI
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments