வேறு வழியில்லை, இனிமேல் சட்ட நடவடிக்கைதான்: நிவேதா பேத்ராஜ்

  • IndiaGlitz, [Monday,May 07 2018]

கடந்த சில நாட்களாக ஒருசில ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் நடிகை நிவேதா பேத்ராஜ் என கூறப்பட்ட ஒரு பிகினி புகைப்படம் வைரலாகியது. உண்மையில் அந்த புகைப்படம் வேறு ஒரு நடிகையின் புகைப்படம் என்று இரண்டு நாட்களுக்கு முன்னர் தெரியவந்தது. இருப்பினும் ஒருசில ஊடகங்கள் இன்னும் அந்த புகைப்படம் நிவேதாவினுடையது என்று செய்திகள் வெளியிட்டு வருவதாக தெரிகிறது. இந்த நிலையில் நிவேதாபேத்ராஜ் மன வருத்தத்துடன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:

'கடந்த சில நாட்களாக ஒரு சில ஊடகங்களில் வேறு ஒரு நடிகையின் புகை படங்களை வெளியிட்டு அது நான் தான் என்று பொய் பரப்புரை செய்து வருகின்றனர். என் மேல் அக்கறை கொண்ட சிலர் தொடர்ந்து இதை பற்றிய கவனத்தை என்னிடம் கொண்டு வந்தனர். இந்த செயலை வெறும் கவன குறைவான செயலாக என்னால் பார்க்க முடியவில்லை. என் பெயரை கெடுக்க வேண்டும் என்றே யாரோ இவ்வாறு செய்கிறார்கள் என்று சந்தேகப்பட வேண்டியுள்ளது. இத்தகைய நிகழ்வுகள் என்னை மிகவும் காயப்படுத்தி உள்ளது. 
இது தொடர்பாக  நான் சட்ட ஆலோசனை செய்து தொடர்ந்து இவ்வாறு செய்வோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கலாம் என முனைப்புடன் உள்ளேன். ஊடகங்களின் மீது எனக்கு பெரும் மரியாதை உண்டு. அதனால் மட்டுமே இதுவரை அமைதியாக இருந்தேன். ஆயினும் இந்த பிரச்சினை தொடருகிறது. ஒரு நடிகை என்றாலும் எங்களுக்கும் குடும்பம் உண்டு. எங்களை சார்ந்த, நாங்கள் சார்ந்த சமுதாயமும் எங்களுக்கும் உண்டு. இத்தகைய பொய் செய்திகள் எங்களுக்கு மிக பெரிய பாதிப்பை தருகிறது. இந்த  கடிதம் எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்வுகள் வராமல் தடுக்கும் என நம்புகிறேன். தொடர்ந்து இவ்வாறு நிகழுமானால் சட்ட நடவடிக்கை ஒன்று தான் தீர்வு, என்று எனது சட்ட ஆலோசகர் கூறுவதை நான் ஏற்றுக கொள்வதை தவிர வேறு வழி இல்லை என்று அந்த அறிக்கையில் நிவேதா கூறியுள்ளார். 
 

More News

இருட்டு அறையில் முரட்டு குத்து: மூன்றே நாளில் இத்தனை கோடி வசூலா? 

கவுதம் கார்த்திக்,  யாஷிகா ஆனந்த், வைபவி நடித்த 'இருட்டு அறையில் முரட்டு குத்து' திரைப்படம் கடந்த மூன்று நாட்களில் சென்னையில் மட்டும் ஒரு கோடிக்கும் மேல் வசூல் செய்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்

ரிபப்ளிக் டிவி அர்னாப் மீது எப்.ஐ.ஆர்! ஏன் தெரியுமா?

ரிபப்ளிக் டிவி அர்னாப் கோஸ்வாமி மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதால் ஊடகங்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையில் புதிய சாதனை படைத்த அவெஞ்சர்ஸ் பட வசூல்

கடந்த மாதம் 27ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியான அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்' என்ற ஹாலிவுட் திரைப்படம் இந்தியாவின் முக்கிய மொழிகளில் வெளியாகி மிகப்பெரிய வசூலை பெற்றுள்ளது

இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தின் ஆச்சரியமான ஓப்பனிங் வசூல்

கவுதம் கார்த்திக், வைபவி, யாஷிகா நடிப்பில் சந்தோஷ் ஜெயகுமார் இயக்கிய 'இருட்டு அறையில் முரட்டு குத்து' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி இளைஞர்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கஸ்தூரி மகாலிங்கத்தை டாக்டர் ஆக்குவது நமது கடமை: விஷால்

இந்தியா முழுவதும் நேற்று நடைபெற்ற நீட் தேர்வில் ஏகப்பட்ட குழப்பங்கள் இருந்த நிலையில் முக்கிய குழப்பமாக தமிழக மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர்