வேறு வழியில்லை, இனிமேல் சட்ட நடவடிக்கைதான்: நிவேதா பேத்ராஜ்
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில நாட்களாக ஒருசில ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் நடிகை நிவேதா பேத்ராஜ் என கூறப்பட்ட ஒரு பிகினி புகைப்படம் வைரலாகியது. உண்மையில் அந்த புகைப்படம் வேறு ஒரு நடிகையின் புகைப்படம் என்று இரண்டு நாட்களுக்கு முன்னர் தெரியவந்தது. இருப்பினும் ஒருசில ஊடகங்கள் இன்னும் அந்த புகைப்படம் நிவேதாவினுடையது என்று செய்திகள் வெளியிட்டு வருவதாக தெரிகிறது. இந்த நிலையில் நிவேதாபேத்ராஜ் மன வருத்தத்துடன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:
'கடந்த சில நாட்களாக ஒரு சில ஊடகங்களில் வேறு ஒரு நடிகையின் புகை படங்களை வெளியிட்டு அது நான் தான் என்று பொய் பரப்புரை செய்து வருகின்றனர். என் மேல் அக்கறை கொண்ட சிலர் தொடர்ந்து இதை பற்றிய கவனத்தை என்னிடம் கொண்டு வந்தனர். இந்த செயலை வெறும் கவன குறைவான செயலாக என்னால் பார்க்க முடியவில்லை. என் பெயரை கெடுக்க வேண்டும் என்றே யாரோ இவ்வாறு செய்கிறார்கள் என்று சந்தேகப்பட வேண்டியுள்ளது. இத்தகைய நிகழ்வுகள் என்னை மிகவும் காயப்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக நான் சட்ட ஆலோசனை செய்து தொடர்ந்து இவ்வாறு செய்வோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கலாம் என முனைப்புடன் உள்ளேன். ஊடகங்களின் மீது எனக்கு பெரும் மரியாதை உண்டு. அதனால் மட்டுமே இதுவரை அமைதியாக இருந்தேன். ஆயினும் இந்த பிரச்சினை தொடருகிறது. ஒரு நடிகை என்றாலும் எங்களுக்கும் குடும்பம் உண்டு. எங்களை சார்ந்த, நாங்கள் சார்ந்த சமுதாயமும் எங்களுக்கும் உண்டு. இத்தகைய பொய் செய்திகள் எங்களுக்கு மிக பெரிய பாதிப்பை தருகிறது. இந்த கடிதம் எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்வுகள் வராமல் தடுக்கும் என நம்புகிறேன். தொடர்ந்து இவ்வாறு நிகழுமானால் சட்ட நடவடிக்கை ஒன்று தான் தீர்வு, என்று எனது சட்ட ஆலோசகர் கூறுவதை நான் ஏற்றுக கொள்வதை தவிர வேறு வழி இல்லை" என்று அந்த அறிக்கையில் நிவேதா கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com