உடைந்த காலுடன் நித்யா மேனனின் அர்ப்பணிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
உடைந்த காலுடன் நடிகை நித்யாமேனன் அர்ப்பணிப்பு உணர்வுடன் தான் நடிக்கும் வெப்தொடர் ஒன்றின் டப்பிங் பணிகளில் ஈடுபட்டிருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நித்யா மேனன் என்பதும் இவர் தற்போது ’மாடர்ன் லவ்’ என்ற தெலுங்கு வெப்தொடரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தொடர் ஆறு பாகங்களாக இருக்கும் நிலையில் அதில் ஒரு பாகத்தில் ரேவதி மற்றும் நித்யா மேனன் நடிக்கும் தொடர் உள்ளது. இந்த தொடரின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் கால் இடறிக் கீழே விழுந்து காலில் காயம் ஏற்பட்ட நடிகை நித்யாமேனன் உடைந்த காலுடன் இந்த டப்பிங் பணியை செய்து வருகிறார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது ’மாடர்ன் லவ்’ தொடரில் என்னுடைய நூரி கேரக்டர் எப்படி இருந்ததோ அதே போல் தான் தற்போது நானும் இருக்கிறேன். எனக்கு அம்மாவாக நடித்த ரேவதி அவர்களுக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். யாராலும் நீங்கள் என் அம்மா இல்லை என்று சொல்ல முடியாது. மக்கள் இந்த தொடரை பார்த்து மகிழ்ச்சி அடைவார்கள் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.
நடிகை ரேவதி நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார் என்பதும் அவருக்கு ரசிகர்கள், திரையுலகினர் வாழ்த்து தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com