புற்றுநோயாளிகளுக்காக தலைமுடியை தானம் செய்த நடிகை

  • IndiaGlitz, [Saturday,April 07 2018]

 

புற்றுநோயாளிகளுக்கு விக் தயாரிக்க பல பிரபலங்கள் தங்கள் தலைமுடியின் ஒரு பகுதியை தானம் செய்து வருவது குறித்த செய்தியை அவ்வப்போது பார்த்து வருகிறோம். சமீபத்தில் நடிகை ஓவியாவும் இதற்காக தனது தலைமுடியை கொடுத்தார் என்பது அறிந்ததே

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் கணேஷ் வெங்கட்ராமனின் மனைவியும் தொலைக்காட்சி நடிகையுமான நிஷா, தற்போது தனது தலைமுடியின் ஒரு பகுதியை புற்றுநோயாளிகளுக்காக வழங்கியுள்ளார். இதுகுறித்து நிஷா தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'புற்றுநோயாளிகளுக்கு விக் தயாரிக்கும் நிறுவனத்திற்கு தலைமுடியை கொடுக்கும் ஒரு நல்ல விஷயத்தை செய்துள்ளேன். இந்த விஷயத்தை எனக்கு தெரிவித்தவருக்கு நான் நன்றி கூறிக்கொள்கிறேன். எனது தலைமுடி யாரோ ஒருவருக்கு விக்காக மாறுவதில் எனக்கு மகிழ்ச்சியே' என்று கூறியுள்ளார்.

தலைமுடியை தானம் கொடுத்த நிஷாவுக்கு சமூக வலைத்தளத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மேலும் தாங்களும் தலைமுடியை தானம் செய்ய விரும்புவதாகவும் இதுகுறித்த விபரங்களை தெரிவிக்குமாறும் பலர் நிஷாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

More News

காலா' அரசியல் படம் தான்: உண்மையை போட்டு உடைத்த நடிகை

ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி தொடங்கி அரசியல் களத்தில் குதிக்கவுள்ளதால் அவர் நடித்து வெளியாகவுள்ள 'காலா' படத்தில் அரசியல் கலந்த பஞ்ச் வசனங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

அப்பப்பப்பா போதும்ம்ம்ம்ம்பா! சூரப்பா குறித்து விவேக்கின் கவிதை

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரிக்கை விடுத்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலையுறுத்தியும் கோலிவுட் திரையுலகினர் பலர் டுவிட்டரில் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

தங்கம் வென்ற தமிழக வீரர் சதீஷ்குமார்: ஒரு சிறுகுறிப்பு

காமன்வெல்த் போட்டியில் பளுதூக்குதல் போட்டியில் தங்கம் வென்று இந்தியாவுக்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ள வேலூரை சேர்ந்த வீரர் சதீஷ்குமார் சிவலிங்கம் என்பவர் குறித்து தற்போது பார்ப்போம்

சல்மான்கான் ஜாமீன் பெறுவதில் திடீர் சிக்கல்

அபூர்வகை மான்களை வேட்டையாடிய வழக்கில் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கும் சல்மான்கானை ஜாமீனில் எடுக்க அவரது வழக்கறிஞர்கள் தீவிர முயற்சியில் உள்ளனர்

காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு பெருமை சேர்த்த தமிழக வீரர்

ஆஸ்திரேலியாவில் கடந்த சில நாட்களாக காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்தியா தனது பதக்க வேட்டையை தொடங்கி வெற்றி நடைபோட்டு வருகிறது.