8 மணி நேரம் டிரெண்டிங்கில் இருந்த நடிகையின் பிறந்தநாள் ஹேஷ்டேக்: காரணம் இதுதான்!
- IndiaGlitz, [Wednesday,August 18 2021]
பிரபல நடிகை ஒருவரின் பிறந்த நாள் கொண்டாட்டம் குறித்த ஹாஷ்டேக் சமூகவலைதளங்களில் 8 மணி நேரம் தொடர்ந்து டிரெண்டிங்கில் இருந்தது பலருக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.
பிரபல நடிகை காஜல் அகர்வாலின் சகோதரியும் ’இஷ்டம்’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்தவருமான நடிகை நிஷா அகர்வால் சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடினார். பொதுவாக நடிகைகள் தங்கள் தோழிகள், உறவினர்களுடன் ஸ்டார் ஹோட்டலில் பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் நடிகை நிஷா அகர்வால் வித்தியாசமாக முதியோர் இல்லத்தில் பிறந்த நாளை கொண்டாடினார்.
முதியோர் இல்லத்தில் உள்ள வயதான, ஆதரவற்ற பெண்களுக்கு அவரே உணவு பரிமாறி அவர்களுடைய மத்தியில் பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் அவருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் #NationalCrushNidhhi என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் இந்திய அளவில் சுமார் 8 மணி நேரம் ட்ரெண்டிங்கில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை நிஷா அகர்வால் மும்பை தொழிலதிபர் கரண் என்பவரை கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் செய்தார் என்பதும் 2018ஆம் ஆண்டு இந்த தம்பதிக்கு மகன் பிறந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Actress @nidhhiagerwal celebrated her birthday in the most unique way at an old age home! Such an heartwarming gesture from her! The hashtag #NationalCrushNidhhi was trending on Twitter for more than 8 hours! pic.twitter.com/sIx0WfEX1h
— JD (@mastervijay2020) August 18, 2021