வீட்டை விட்டு திடீரென ஓடிப்போன இளம் நடிகை!

  • IndiaGlitz, [Tuesday,September 28 2021]

சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் வீட்டை விட்டு ஓடி வந்து விட்டதாக இளம் நடிகை ஒருவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்காக பல இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் வீட்டை விட்டு ஓடிவந்து முயற்சி எடுத்து வருகின்றனர் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். அந்த வகையில் நேபாளத்தைச் சேர்ந்த நடிகை நிரிஷா பாஸ்னெட் என்பவர் தான் வீட்டை விட்டு மும்பைக்கு ஓடி வந்து சினிமா வாய்ப்பை தேடியதாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

தனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது சிறு வயதிலிருந்தே கனவு என்றும் அந்த கனவை நிறைவேற்றுவதற்காக ஒரு கட்டத்தில் நேபாளத்தில் உள்ள காத்மண்டுவில் இருக்கும் எனது வீட்டில் இருந்து மும்பைக்கு ஓடி வந்து விட்டேன் என்றும், மும்பையில் எனக்கு யாரையும் தெரியாது என்றாலும் கொஞ்சம் பணம் மற்றும் நிறைய நம்பிக்கையுடன் காத்து இருந்தேன் என்றும் என்னுடைய காத்திருப்பு வீண் போகாமல் தொலைக்காட்சி தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்றும் கூறினார்.

தனக்கு கிடைத்த முதல் வாய்ப்பில் தனக்கு கிடைத்த சித்ரா என்ற கதாபாத்திரம் மிகுந்த மகிழ்ச்சி அளித்ததாகவும் உண்மையாகவே என்னுடைய கேரக்டர் போலவே அந்த கதாபாத்திரமும் இருந்தது என்றும் அதனால் நடிப்பதற்காக பெரிய அளவில் மெனக்கெடவில்லை என்றும் கூறியுள்ளார்.

எனக்கு மும்பையில் என்னுடன் பணிபுரியும் பணியாளர்கள் தவிர வேறு யாரையும் தெரியாது என்றாலும் என்மீது எனக்கு இருக்கும் நம்பிக்கை தான் இந்த அளவிற்கு என்னை உயர்த்தி உள்ளது என்றும் எனது சினிமா வேலையை நான் மகிழ்ச்சியுடன் செய்து கொண்டிருக்கின்றேன் என்றும் நடிகை நிரிஷா பாஸ்னெ அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

More News

இவ்வளவு சீக்கிரம் இதை நான் எதிர்பார்க்கவே இல்லை: சமந்தா

பிரபல நடிகை சமந்தா ஒரு பக்கம் தனது கணவரை விவாகரத்து செய்யப் போவதாக வதந்திகள் பரவி வரும் நிலையில் தான் வளர்க்கும் நாய்கள் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறிய அவர்

'வலிமை' அப்டேட்டை என்னால் மறக்க முடியாது: மொயின் அலி பேட்டி!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விளையாடிய போது ரசிகர்கள் என்னிடம் 'வலிமை' அப்டேட் கேட்டதை என்னால் மறக்க முடியாது என நேற்று ஓய்வை அறிவித்த மொயின் அலி

விஜய்சேதுபதி-பொன்ராம் படத்தின் நாயகி: அதிகாரபூர்வ அறிவிப்பு!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வரும் நிலையில் பிரபல இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் அவர் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார்

திருப்பதியில் குடும்பத்துடன் நடிகர் பிரபு: என்ன வேண்டி கொண்டார் தெரியுமா?

கடந்த சில நாட்களாக தமிழ் திரையுலகினர் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்து வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம்.

கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிவாரணம்- மத்திய அரசு அறிவிப்பு!

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புப்படி கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.50