திருமணத்தை முன்னிட்டு தோழிகளுக்கு பேச்சிலர் பார்ட்டி கொடுத்த ஹிட் பட நடிகை!

  • IndiaGlitz, [Monday,February 22 2021]

’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்ற திரைப்படத்தில் நடித்த நடிகைக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதை அடுத்து அவர் தோழிகளுக்கும் சகோதரிகளுக்கும் பேச்சிலர் பார்ட்டி கொடுத்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது

இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கிய வெற்றி படம் ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’. இந்த திரைப்படத்தில் நாயகிக்கு தோழியாக நிரஞ்சனி என்பவர் நடித்திருந்தார். இவர் இந்த படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமியை காதலித்த நிலையில் இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது

நடிகை நிரஞ்சனி தேசிய விருது பெற்ற அகத்தியனின் மூன்றாவது மகள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே அகத்தியனின் இரண்டு மகள்களான கனி மற்றும் விஜயலட்சுமி ஆகிய இருவரும் இயக்குனர்களை திருமணம் செய்திருக்கும் நிலையில் மூன்றாவது மகளான நிரஞ்சனியும் இயக்குனரையே திருமணம் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் நிரஞ்சனி, ‘திரிஷா இல்லனா நயன்தாரா’ ’பென்சில்’ ’கபாலி’ உள்பட பல படங்களுக்கு காஸ்ட்டியூம் டிசைனராக பணி புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் தேசிங்கு பெரியசாமியுடன் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதை அடுத்து தோழிகளுக்கும் சகோதரிகளுக்கும் பேச்சிலர் பார்ட்டி கொடுத்துள்ளார் நிரஞ்சனி. இது குறித்த புகைப்படங்களை நடிகை விஜயலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது,