தூத்துகுடி விவகாரத்தில் கைதான நடிகைக்கு ஜாமீன்

  • IndiaGlitz, [Friday,June 29 2018]

சமீபத்தில் நடந்த தூத்துகுடி துப்பாகி சூடு சம்பவம் குறித்து கோலிவுட்டில் உள்ள பல நட்சத்திரங்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். மேலும் கமல், ரஜினி உள்பட பல நடிகர்கள் தூத்துகுடிக்கு நேரடியாக சென்று துப்பாக்கி சூட்டால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினர்.

இந்த நிலையில் தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் போலீசார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறியதாக பிரபல தொலைக்காட்சி சீரியல் நடிகை நிலானி சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இவர் வெளியிட்டிருந்த வீடியோவில் போலீஸ் உடையணிந்து போலீசார்களை தாக்கி பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 22ஆம் தேதி கைது செய்யபட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலானி, தன்னை ஜாமீனில் வெளியே விட வேண்டும் என்று மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு பரிசீலிக்கப்பட்டு அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அவர் தினமும் வடபழனி காவல்நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையை சைதாப்பேட்டை நீதிமன்றம் விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஒரே படத்தில் இணையும் இரண்டு அடல்ட் காமெடி இயக்குனர்கள்

கோலிவுட்டில் அடல்ட் காமெடி படம் என்ற பிரிவை தொடங்கி வைத்தவர் ஆதிக் ரவிச்சந்திரன் என்று கூறலாம். இவர் இயக்கிய 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா' படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது

நேற்று பாலாஜி, இன்று மகத்: தொடரும் நித்யாவின் மோதல்

பிக்பாஸ் வீட்டில் உள்ள 16 போட்டியாளர்களில் நித்யாவுக்கும் இன்னொருவருக்கும் மட்டுமே இதுவரை பிரச்சனை வந்து கொண்டிருக்கின்றன. முதல் வாரம் வெங்காய பிரச்சனையில் கிட்டத்தட்ட எல்லோருமே நித்யாவை குறை கூறினர்.

நயன்தாராவின் 'கோலமாவு கோகிலா' சென்சார் தகவல்கள்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து முடித்துள்ள 'கோலமாவு கோகிலா' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது

கார்த்தியின் 'கடைக்குட்டி சிங்கம்' சென்சார் மற்றும் ரிலீஸ் தேதி தகவல்கள்

கார்த்தி, சாயிஷா நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா தயாரிப்பில் உருவாகியுள்ள 'கடைக்குட்டி சிங்கம்' படத்திற்கு ரிலீசுக்கு முன்னரே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் புதிய டுவிஸ்ட்: எஜமானர்களாக மாறிய பெண்கள்

பிக்பாஸ் வீட்டில் கடந்த மூன்று நாட்களாக ஆண்கள் எஜமானர்களாகவும், பெண்கள் வேலைக்காரிகளாகவும் இருக்கும் டாஸ்க் நடந்து கொண்டிருந்தது.