நடிகை நிக்கி கல்ராணி இந்த நடிகரை திருமணம் செய்கிறாரா?

  • IndiaGlitz, [Friday,March 18 2022]

தமிழ் தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகை நிக்கி கல்ராணி பிரபல ஹீரோ ஒருவரை திருமணம் செய்ய இருப்பதாக வெளிவந்த தகவல் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜிவி பிரகாஷ் ஹீரோவாக அறிமுகமான ’டார்லிங்’ என்ற படத்தில்தான் நிக்கி கல்ராணி நாயகியாக அறிமுகமானார் என்பதும் அதன் பின்னர் அவர் ’யாகாவாராயினும் நாகாக்க’ ’மொட்ட சிவா கெட்ட சிவா’ ’ஹர ஹர மகாதேவி’ 'மரகத நாணயம்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் நடிகை நிக்கி கல்ராணி, நடிகர் ஆதியை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகிறார் என்றும் விரைவில் திருமண நிச்சயதார்த்தம் மற்றும் அதனை அடுத்து திருமணம் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

கடந்த 2020 ஆம் ஆண்டு ஆதி தந்தையின் பிறந்த நாள் விழாவில் நிக்கி கல்ராணி கலந்து கொண்டார் என்றும் அதேபோல் ஹைதராபாத் விமான நிலையத்தில் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி இருவரும் ஒன்றாக இருந்த புகைப்படங்கள் வைரல் ஆனதை அடுத்தே இருவரின் காதல் உறுதி செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆதி-நிக்கி கல்ராணி திருமண குறித்த முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று கூறப்படுகிறது.