குரங்குகளுடன் இங்கிலீஷில் பேசிய தமிழ் நடிகை: வைரல் வீடியோ

  • IndiaGlitz, [Saturday,January 30 2021]

குரங்குகளுக்கு உணவு தின்பண்டங்கள் அளித்ததோடு அதனுடன் இங்கிலீஷில் பேசிய வீடியோவை தமிழ் நடிகை ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

ஜிவி பிரகாஷ் நாயகனாக அறிமுகமான ’டார்லிங்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி. அதன்பின் ’யாகாவாராயினும் நாகாக்க’ ’வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ ’மொட்ட சிவா கெட்ட சிவா’ ’ஹரஹர மகாதேவகி’, கலகலப்பு 2’ உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்

இந்த நிலையில் சமீபத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிக்கி கல்ராணி, தற்போது அதிலிருந்து குணமாகி, மீண்டும் படப்பிடிப்புகளில் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள வீடியோ ஒன்றில் குரங்குகளுக்கு பிஸ்கட் மற்றும் சில தின்பண்டங்களை கொடுத்து அதனுடன் தமிழ் மட்டுமின்றி இங்கிலீஷிலும் காமெடியாக பேசிக் கொண்டிருந்த சில காட்சிகளின் வீடியோவை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவுக்கு லைக்ஸ்களும் காமெடியான கமெண்ட்ஸ்களும் குவிந்து வருகிறது