சாலையில் நடந்துசென்ற பிரபல நடிகையிடம் வழிப்பறி… அதிர்ச்சி தகவல்!

  • IndiaGlitz, [Thursday,December 02 2021]

பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருந்துவரும் நிகிதா தத்தா சாலையில் நடந்து சென்றபோது தன்னுடைய செல்போனை பறிக்கொடுத்துவிட்டதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்தச் சம்பவத்தால் கடும் அதிர்ச்சி அடைந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

நடிகை நிகிதா தாத்தா மும்பையின் பாந்த்ரா பகுதியில் உள்ள 14 ஆவது சாலையில் நேற்று இரவு 7.45 மணிக்கு நடந்து சென்றதாகவும் அப்போது அந்த வழியே பைக்கில் வந்த இருவரில் ஒருவர் தன்னுடைய தலையில் தட்டியபோது இன்னொருவர் கையில் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு சென்றுவிட்டார், கண் இமைக்கும் நேரத்தில் நடந்துவிட்ட இந்தச் சம்பவத்தால் நான் கடும் அதிர்ச்சியடைந்தேன் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்தத் திருடர்களை நோக்கி நான் ஓடிச்சென்றதைப் பார்த்து, பின்னால் பைக்கில் வந்த இளைஞர் ஒருவர் அவர்களைத் துரத்திச் சென்றார். ஆனாலும் அவர்கள் தப்பிச்சென்றுவிட்டனர். இதனால் கடும் பீதியடைந்து விட்டேன். அந்தச் சம்பவத்தில் இருந்து என்னால் மீளவே முடியவில்லை. இதனால் மக்கள் பொது இடங்களுக்குச் செல்லும்போது விழிப்புடன் இருக்க வேண்டும் என்று நடிகை நிகிதா தத்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.

“கபீர் சிங்“ போன்ற திரைப்படங்களில் நடித்து வரவேற்பு நடிகையாக வலம்வரும் நிகிதா தத்தா இந்தச் சம்பவம் குறித்து தற்போது பாந்த்ரா காவல் நிலையத்தில் புகார் அளித்து இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார். இதையடுத்து நடிகை நிகிதா தத்தாவிற்கு நடிகர் அபிஷேக் பச்சன் மற்றும் பாடகி ஷெர்லி ஆகியோர் ஆறுதல் தெரிவித்து கூறியுள்ளனர்.

More News

ஜிவி பிரகாஷின் அடுத்த பட டைட்டில் லுக் ரிலீஸ்!

தமிழ் திரையுலகில் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் என இரண்டு குதிரைகளில் ஒரே நேரத்தில் சவாரி செய்துவரும் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவான 'ஜெயில்' மற்றும் 'பேச்சுலர்' ஆகிய திரைப்படங்கள்

கலைப்புலி எஸ்.தாணுவின் அடுத்த படைப்பு: முக்கிய வேடங்களில் இரு பிரபலங்கள்!

தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான கலைப்புலி எஸ் தாணு அவர்களின் அடுத்த படைப்பில் இரண்டு பிரபலங்கள் நடித்து இருப்பதாகவும் இந்த படத்தின் டிரைலர் இன்று மாலை

அபிஷேக் முகத்தில் பேப்பரை தூக்கியெறிந்த சிபி: ஒரே அணிக்குள் ஏற்பட்ட மோதல்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது பிரேக்கிங் நியூஸ் என்ற டாஸ்க் நடைபெற்று வருகிறது என்பதும் இதில் ரெட் டிவி மற்றும் புளூ டிவி என இரண்டு அணிகள் பிரிந்து ஒவ்வொரு அணியில் உள்ளவர்கள்

எல்லாப் புகழும், எல்லாம் வல்ல இறைவனுக்கே! 'மாநாடு' வெற்றிக்கு நன்றி தெரிவித்த யுவன்!

சிம்பு நடித்த 'மாநாடு' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் வெற்றிக்கு சிம்பு, எஸ்ஜே சூர்யா, இயக்குனர் வெங்கட் பிரபு எடிட்டர் பிரவீன் ஆகியோர்

வெளியாவதற்கு முன்பே 100 கோடி வசூல்… புதிய சாதனை படைத்த  மரைக்காயர் திரைப்படம்!

நடிகர் மோகன்லால் நடிப்பில் நாளை (டிசம்பர் 2) வெளியாகவுள்ள திரைப்படம் “மரைக்காயர்- அரபிக் கடலின்டே சிம்ஹம்“