ஜிவி பிரகாஷ் பட நாயகி மருத்துவமனையில் அனுமதி! அறுவை சிகிச்சையா?
- IndiaGlitz, [Friday,April 26 2019]
ஜிவி பிரகாஷ் நடிப்பில் இயக்குனர் எழில் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ஒன்றின் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதம் முதல் நடைபெற்று வருகிறது. இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படம் ஒரு முழுநீள காமெடி படமாக உருவாகி வரும் நிலையில் இந்த படத்தின் நாயகியாக நிகிஷா பட்டேல் நடித்து வந்தார்.
இந்த நிலையில் நடிகை நிகிஷா பட்டேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த தகவலை அவரே தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:
கடந்த சில நாட்களுக்கு முன் நான் மருத்துவமனையில் ஒரு அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டேன். இருப்பினும் எழில் அவர்களின் படத்தில் என்னுடைய பாகத்தின் படப்பிடிப்பை நான் முடித்துவிட்டேன். இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் மற்றும் சதீஷுடன் நடித்தது மறக்க முடியாத இனிமையான அனுபவங்கள். மருத்துவமனையில் இருந்து குணமாகி வீடு திரும்பியதும் எனது அடுத்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளேன்' என்று கூறியுள்ளார்.
நடிகை நிகிஷா பட்டேல் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
So i was hospitalised and had surgery last few days so wasn't able to post up but I wrapped up my portion for ezhil sir film with these two sweeties @actorsathish @gvprakash ! Sweet shoot starting my next after recovery. pic.twitter.com/g32iCtgHHc
— Nikesha Patel (@NikeshaPatel) April 26, 2019