ஒருநாள் இரவுக்கு அழைத்த வாலிபரை ஒரே நிமிடத்தில் பிரபலமாக்கிய நடிகை
Send us your feedback to audioarticles@vaarta.com
வாட்ஸ் மூலம் பிரபல நடிகை ஒருவரை ஒருநாள் இரவுக்கு அழைத்த வாலிபர் ஒருவரை அந்த நடிகை உலகிற்கே அடையாளம் காட்டி பிரபலமாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழில் 'நீ என்ன மாயம் செய்தாய்', 'ஒரு மெல்லிய கோடு', 'லொடுக்கு பாண்டி போன்ற படங்களிலும் பல மலையாள, கன்னட, தெலுங்கு படங்களிலும் நடித்தவர் நடிகை நேஹா சக்சேனா. இவரிடம் வாட்ஸ் மூலம் துபாயை வேலை செய்யும் ஒருவர் தன்னுடன் ஒருநாள் இரவை கழிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார். இந்த மெசேஜை பார்த்த நேஹா, ஆத்திரப்படாமல், அந்த நபரின் வாட்ஸ் அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களை கண்டுபிடித்துள்ளார். பின்னர் அந்த நபரின் எல்சன் என்றும், மற்றும் அவரது ஊர், இருப்பிடம், பணி செய்யும் இடம் என அனைத்தையும் கண்டுபிடித்து அதன்பின்னர் அந்த நபரின் முழு விபரங்களை தன்னுடைய ஃபேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.
இதுபோன்ற நாய்க்க்கு பாடம் புகட்டவும், பெண்களிடம் இவர் நடந்து கொள்ளும் விதத்தை அவருடைய குடும்பத்தினர்களும் மற்றவர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காவும் இந்த விஷயத்தை தான் தெரியப்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார். ஒரு சினிமா பிரபலமாக இருந்து கொண்டு இதைக்கூட தான் செய்யவில்லை என்றால் ஒரு சாதாரண பெண்ணுக்கு நான் எப்படி முன்மாதிரியாக இருக்க முடியும் என்று கூறியுள்ள நேஹா, சமூகத்தில் உள்ள இதுபோன்ற நபர்களை அடையாளப்படுத்தினால்தான் இன்னொரு நிர்பயா பாதிக்கப்பட மாட்டார் என்று கூறியுள்ளார்.
தனக்கு பாலியல் கொடுத்த நபரை கண்டு அஞ்சாமல் அந்த நபரை உலகிற்கு ஒரே நிமிடத்தில் வெளிச்சப்படுத்திய நேஹாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அதே நேரத்தில் இதுபோன்ற குற்றச்சாட்டுக்கள் வரும்போது வழக்கமாக கூறும் 'என்னுடைய மொபைல் ஹேக் செய்யப்பட்டது என்பதையே எல்சனும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com