close
Choose your channels

கணவர், குழந்தையுடன் நீலிமா ராணி: புகைப்படங்களை பார்த்து ஆச்சரியம் அடைந்த ரசிகர்கள்

Wednesday, September 9, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சின்னத்திரை சீரியல்களில் கொடிகட்டி பறந்து வரும் நடிகைகளில் ஒருவர் நீலிமா ராணி. இவர் தனது  குழந்தை மற்றும் கணவருடன் உள்ள புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்ததை அடுத்து அந்த பதிவுகள் தற்போது வைரல் ஆகி வருகின்றன 

சிவாஜி கணேசன், கமலஹாசன் நடித்த தேவர் மகன் உள்ளிட்ட ஒரு சில படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும், அதன் பின்னர் பிரியசகி, புகைப்படம், நான் மகான் அல்ல உள்பட பல திரைப்படங்களில் இரண்டாவது கதாநாயகியாகவும் நடித்தவர் நடிகை நீலிமா ராணி. அதன்பின் மேலும் சின்னத்திரை தொலைக்காட்சிகளில் இவர் நடித்த அனைத்து சீரியல்களும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ’வாணி ராணி’ சீரியலில் இவர் நடித்த டிம்பிள் கேரக்டர், ராதிகாவின் கேரக்டருக்கு இணையாக இருக்கும் என்பதும் லட்சக்கணக்கான ரசிகர்களை இந்த சீரியல் அவருக்கு பெற்றுக் கொடுத்தது என்பதும் குறிப்பிடத்தக்கதுஇந்த நிலையில் நீலிமா ராணி இளம் வயதிலேயே இசைவாணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கும் இவரது கணவருக்கும் 12 வருட வித்தியாசம் இருந்தாலும் இருவருக்கும் இடையே உள்ள அன்பும் காதலும் கொஞ்சமும் குறையவில்லை. திருமணமாகி ஒன்பது ஆண்டுகள் கழித்து நீலிமா ராணிக்கு பெண் குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் சமீபத்தில் நீலிமா ராணி தனது 12வது திருமண நாளை கொண்டாடிய நிலையில், குழந்தை மற்றும் கணவருடன் கூடிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செய்துள்ளார். நீலிமா ராணிக்கு தற்போது 36 வயதானாலும் இன்னும் இளம் நடிகைகளுக்கு சவால் விடுக்கும் வகையில் அழகிய தோற்றத்தில் உள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பதும் பெரும்பாலான ரசிகர்கள் நீலிமா ராணிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment