ஜனவரி முதல் நாங்கள் நால்வர்: 2வது குழந்தை அறிவிப்பை வெளியிட்ட நடிகை!

  • IndiaGlitz, [Monday,September 06 2021]

தமிழ் நடிகை ஒருவர் தான் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதை தனது இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ள நிலையில் இந்த அறிவிப்புக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.

கமல்ஹாசன் நடித்த ’தேவர் மகன்’ என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின் இதயத்திருடன், திமிரு, மொழி, ராஜாதி ராஜா உள்பட பல திரைப்படங்களிலும், மெட்டி ஒலி, கோலங்கள், தென்றல், செல்லமே உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தவர் நடிகை நீலிமா ராணி.

இவர் கடந்த 2008ஆம் ஆண்டு இசைவாணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் நீலிமாராணி தனது திருமண நாள் கொண்டாட்டம் குறித்த புகைப்படத்தை பதிவு செய்து தற்போது தான் மீண்டும் கர்ப்பமாக இருப்பதாகவும் 20 வாரங்கள் ஆகிவிட்டது என்றும் வரும் ஜனவரியில் குழந்தை பிறக்கும் என்றும் ஜனவரியில் நாங்கள் நால்வராவோம் என்றும் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.

More News

நடிகை மேக்னாராஜ் குழந்தையின் பெயர்சூட்டு விழா: வைரல் புகைப்படங்கள்!

நடிகர் அர்ஜூனின் உறவினரான சிரஞ்சீவி சார்ஜா என்பவரை நடிகை மேக்னா ராஜ் கடந்த 2018ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் மேக்னாராஜ் கடந்த ஆண்டு

சூர்யா-கார்த்தி இணையும் படத்தின் நாயகியாகும் ஷங்கர் மகள்!

சூர்யா மற்றும் கார்த்தி இணையும் திரைப்படத்தில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் நடிகையாக அறிமுகமாகிறார் என்ற தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது

காதலில் விழுந்துவிட்டாரா 'செம்பருத்தி' ஷபானா? வைரல் புகைப்படம்!

விஜய் டிவியில் கடந்த 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் தொடர் 'செம்பருத்தி' என்பதும் பிரியாராமன் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் இந்த தொடரில் கார்த்தி மற்றும் ஷபானா நாயகன் நாயகியாக

விஜய்க்கு வெற்றிமாறன் கூறிய கதை இதுதானா? மாஸ் தகவல்

தளபதி விஜய்க்கு பிரபல இயக்குனர் வெற்றிமாறன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒரு கதை கூறினார் என்றும் இந்த கதையை கண்டிப்பாக நாம் இணைந்து திரைப்படமாக்குவோம் என்றும்

'அண்ணாத்த' பட நடிகருக்கு 2வது திருமணம்: வைரல் புகைப்படம்!

'அண்ணாத்த' உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் ஒருவருக்கு இரண்டாவது திருமணம் ஆனதை அடுத்து அது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது