இந்த நாளை குறித்து வைத்து கொள்ளுங்கள்: என்கவுண்டர் குறித்து நடிகை நயன்தாரா பரபரப்பு கருத்து

  • IndiaGlitz, [Saturday,December 07 2019]

ஹைதராபாத்தில் பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து உயிரோடு எரித்துக் கொலை செய்த நால்வரை நேற்று தெலுங்கானா போலீசார் என்கவுன்டர் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து பல்வேறு தரப்பினர் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இது குறித்து நடிகை நயன்தாரா தன்னுடைய கருத்தை அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

சரியான நேரத்தில் வழங்கப்படும் நீதிக்கு இணையில்லை. இந்த கூற்று உண்மையான நாயகர்களால் இன்று உண்மையாகியிருக்கிறது. தெலங்கானா காவல் அதிகாரிகள் நீதியை நிலைநாட்டியிருக்கிறார்கள்.

காட்டுமிராண்டிகளின் ஈனத்தனமான சட்டத்திற்குப் புறம்பாக, பெண் மீது காட்டப்பட்ட வன்முறைக்கு எதிராகத் தீர்க்கமான பதிலளித்துள்ளார்கள். பெண்களின் முன்னேற்றத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வது நம் கடமை. இந்த நடவடிக்கை என்பது சரியாக வழங்கப்பட்ட நீதி. இதுவே நியாயமான மனிதமிக்க நடவடிக்கை என அழுத்திச் சொல்வேன்.

நாட்டில் உள்ள பெண்கள் அனைவரும் இந்த நாளை, தேதியைப் பெண்களுக்கு சரியானா நியாயம் கிடைத்த நாளாகக் குறித்து வைத்துக் கொள்ளலாம். பெண்களுக்கு இது சற்றே ஆறுதல். அவர்களுக்கு எதிராக வன்புணர்வு செய்யும் காட்டுமிராண்டிகளுக்கு இந்த நடவடிக்கை சற்றேனும் பயம் தரும்.

மனிதம் என்பது அனைவரிடத்தும் சரிசமமாக மரியாதை தருவதும், அன்பு செலுத்துவது, இரக்கம் கொள்வதுமே ஆகும். நீதி கிடைத்திருக்கும் இத்தருணம் மகிழ்ச்சியே என்றாலும், நாம் நம் குழந்தைகளுக்குப் பெண் பாதுகாப்பு குறித்த கல்வியை கற்றுக் கொடுக்க வேண்டியது அவசியம்.

குறிப்பாய் நம் ஆண் குழந்தைகளுக்குப் பெண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை கற்றுத் தர வேண்டும். பெண்களை மதிப்பவனே, பாதுகாப்பவனே நாயகன் என்பதை அழுத்தமாக அவன் மனதில் பதிய வைக்க வேண்டும்.

எதிர்கால உலகைப் பெண்மீதான வன்முறைக்கு எதிரான, அன்பான உலகாக மாற்ற வேண்டியது நம் கடமை. அப்போது தான் நாம் நிம்மதியான பெருமூச்சுடன் அன்பை அனைவரிடத்தும் பகிர்ந்து கொள்ள முடியும்.

இவ்வாறு நயன்தாரா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

More News

இணையத்தில் வைரலாகும் தமிழ் நடிகையின் கவர்ச்சி நடன வீடியோ

சிவகார்த்திகேயன் நடித்த 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' என்ற படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ஷாலு ஷம்மு. இந்த படத்திற்கு பின்னர் 'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்

ஒரு வாழைப்பழத்தின் விலை ரூ.85 லட்சம்..!

அமெரிக்காவில் ஒரு வாழைப்பழம் ரூ85 லட்சத்தற்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் சம்பத்தில் நடந்துள்ளது.

கார்த்திக் சுப்புராஜின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

விஜய் சேதுபதி நடித்த பீட்சா என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அதன்பின்னர் ஜிகர்தண்டா, இறைவி, மெர்க்குரி

வெங்காயம் திருடிய நபர்.. கட்டி வைத்து அடித்த வியாபாரிகள்.

புதுச்சேரியில் உள்ள சந்தையில் வெங்காயம் திருடிய நபரை அடித்து உதைத்து போலீசில் வியாபாரிகள் ஒப்படைத்தனர்

மருத்துவ செலவிற்கு பணமில்லை: நோயுற்ற மனைவியை உயிரோடு புதைத்த கணவன்

மனைவிக்கு வந்த நோய்க்கு சிகிச்சை செய்ய பணம் இல்லாததால் மனைவியை உயிரோடு புதைத்த கணவன் குறித்த அதிர்ச்சி செய்தி ஒன்று தற்போது வெளிவந்துள்ளது