ஐதராபாத் விமான நிலையத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா: வைரல் புகைப்படங்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் ரஜினியின் சம்பந்தப்பட்ட படப்பிடிப்பை விரைவில் முடிக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இன்னும் ஒரு சில நாட்களில் ரஜினி சம்பந்தப்பட்ட படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ரஜினியுடன் நயன்தாரா நடிக்கும் சில காட்சிகள் படமாக்கப்பட வேண்டிய நிலையில் நயன்தாரா இன்று ஹைதராபாத்துக்கு சென்றுள்ளார். அவர் விமான நிலையத்தில் விமானத்தில் இருந்து இறங்கி நடந்து செல்லும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. இன்னும் ஒரு சில நாட்கள் ரஜினி மற்றும் நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பையும் இன்னும் ஒரு சில நாட்களில் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும், இதனை அடுத்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை தொடங்கி வரும் தீபாவளி அன்று இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது.
ரஜினிகாந்த், மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ், உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments