நடிகை சமந்தா போலவே நடிகை நந்திதாவுக்கும் அரியவகை நோயா? செம ஷாக்கான தகவல்…!
Send us your feedback to audioarticles@vaarta.com
தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக இருந்துவரும் நடிகை சமந்தா மயோசிடிஸ் எனும் அரியவகை தசை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியான நிலையில் அவர் தீவிர சிகிச்சைக்குப் பிறகு திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் உடல்நலக் காரணங்களுக்காக சினிமாவிற்கு ஒருவருடம் பிரேக் எடுத்திருக்கும் தகவல் ரசிகர்களிடையே பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் தமிழ், தெலுங்கு, கன்னட மொழி சினிமாக்களில் பிசியாக நடித்துவரும் நடிகையான நந்திதா சுவேதா தனக்கு ஃபைப்ரோமியால்ஜியா எனும் தசை பிரச்சனை இருப்பதாகக் கூறியுள்ளார். இதனால் சாதாரண வேலைகளைச் செய்தால் கூட தசைகளில் பிரச்சனை ஏற்படுவதாகக் கூறிய அவர் உடற்பயிற்சிகளை செய்ய முடியாது. ஆனாலும் கடினமாக முயற்சி செய்து எனது உடல் எடையை குறைத்து தெலுங்கு திரைப்படமான ‘ஹிடிம்பா‘ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளேன் என்று கூறியுள்ளார்.
கன்னட சினிமாவில் கடந்த 2008 இல் வெளியான ‘நந்தா லவ்ஸ் நந்திதா‘ எனும் திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நந்திதா. இவர் தமிழ் சினிமாவில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான ‘அட்டகத்தி’ திரைப்படத்தில் நடித்து பிரபலமானார். தொடர்ந்து ‘எதிர்நீச்சல்’, ‘முண்டாசுபட்டி’ என பல ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ள இவர் தற்போது தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.
அந்த வகையில் நடிகை நந்திதா சுவேதா நடித்தள்ள ‘ஹிடிம்பா‘ திரைப்படம் ஜுலை 20 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கான புரமோஷன் வேலைகள் மும்முரமாக நடந்துவரும் நிலையில் நடிகை நந்திதா அளித்துள்ள நேர்காணல் ஒன்றில் தனக்கு ஃபைப்ரோமியால்ஜியா எனும் தசை நோய் பாதிப்பு இருப்பதை வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக உடற்பயிற்சி செய்ய முடியாது. மேலும் உடல் எடையில் ஏற்ற, இறக்கம் இருந்துகொண்டே இருக்கும். உடல்சோர்வு, மறதி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும் இந்த நோயால் அவதிப்பட்டு வருவதாகக் கூறிய அவர் சில சமயங்களில் சதாரண வேலைகளைச் செய்யும்போது கூட தசை பிரச்சனையால் பாதிக்கப்படுவதாக கூறியிருப்பது ரசிகர்களிடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே நடிகை சமந்தா மயோசிடிஸ் பாதிப்பால் அவதிப்பட்டு வரும் தகவல்களை அவ்வபோது ரசிகர்கள் ஊடகங்களில் பார்த்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை நந்திதா சுவேதா தெரிவித்து இருக்கும் தகவல் ரசிகர்களிடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று ரசிகர்கள் ஆறுதல் கூறிவருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments