வெள்ளை தாவணியில் கலக்கலான புகைப்படம் வெளியிட்ட இளம் நடிகை!
- IndiaGlitz, [Friday,November 26 2021]
இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான “அட்டகத்தி“ திரைப்படத்தில் நடித்து கவனம் ஈர்த்தவர்தான் நடிகை நந்திதா ஸ்வேதா. பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண்போலவே இருக்கும் இவர் நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து “இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலக்குமாரா“ படத்தில் இடம்பெற்ற “குமுதா“ கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.
இதைத் தொடர்ந்து “எதிர் நீச்சல்“, “முண்டாசுப்பட்டி“ போன்ற திரைப்படங்களில் அழகான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். வலிமையான கிராமத்துப் பெண் வேடங்களில் மட்டுமே நடித்துக் கொண்டிந்த இவர் தடாலடியாக “ஐபிசி 376“ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.
இறுதியாக “நெஞ்சம் மறப்பதில்லை“ திரைப்படத்தில் நடித்திருந்த இவர் தற்போது நடிகர் அரவிந்த் சாமி, நடிகை சிம்ரன், நடிகை ரித்திகா சிங் போன்ற நட்சத்திரங்களுடன் உருவாகிவரும் “வணங்காமுடி“ திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் நடிகர் விஜய்சேதுபதி மற்றும் நடிகர் விஷ்ணுவிஷால் நடிப்பில் உருவாகி வரும் “இடம்பொருள் ஏவல்“ படத்திலும் “எம்ஜிஆர் மகன்“ போன்ற ஒரு சில திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
இதையடுத்து சோஷியல் மீடியாவில் ஆர்வம் காட்டிவரும் நடிகை நந்திதா ஸ்வேதா சமீபகாலமாக மார்டன் உடைகளை அணிந்து தனது போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் வெள்ளை லெகங்காவில் இவர் வெளியிட்டு இருக்கும் கலக்கான புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் தற்போது வைரலாகி வருகிறது.