அதிரடி ஆக்சன் காட்சிகளில் பிரபல நடிகை
Send us your feedback to audioarticles@vaarta.com
பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான 'அட்டக்கத்தி' படத்தின் மூலம் அறிமுகமான நடிகை நந்திதா, விஜய் நடித்த 'புலி' உள்பட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் அவர் தற்போது அரவிந்தசாமி முக்கிய வேடத்தில் நடித்து வரும் 'வணங்காமுடி' படத்தின் போலீஸ் கேரகரில் நடித்து வருகிறார்.
இந்த கேரக்டர் குறித்து நந்திதா கூறியபோது, 'இந்த படத்தில் எனக்கு ஜோடி யாரும் இல்லை. இந்த படத்தில் சாரா என்ற போல்டான போலீஸ் கேரக்டரில் நடித்து வரும் எனக்கு அதிரடி ஆக்சன் காட்சிகளும் உண்டு. இதுவரை ஹோம்லி கேரக்டரில் நடித்து வந்த நான், அந்த இமேஜை உடைப்பதற்காக எடுத்த புதிய முயற்சிதான் இந்த கேரக்டரை ஏற்றுக்கொண்டதற்கு முக்கிய காரணம்.
மேலும் இந்த படத்தில் நான் அரவிந்தசாமியுடன் நடிக்கவுள்ளதாக கேள்விப்பட்டவுடன் எனது தோழிகள் என்னை பார்த்து பொறாமைப்பட்டார்கள். அவரது 'ரோஜா' படம் முதல் அனைத்து படங்களை பார்த்து ரசித்த எனக்கு அவருடனே நடிக்க வேண்டும் என்ற வாய்ப்பு கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது.
சஸ்பென்ஸ் மற்றும் எமோஷனல் கலந்த இந்த படம் நிச்சயம் எனக்கு ஒரு மாறுதலான படம் தான் என்று கூறினார். மேலும் ஏற்கனவே செல்வராகவனின் 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தில் நடித்து முடித்துள்ள நந்திதா 'சதுரங்க வேட்டை' தெலுங்கு ரீமேக் படத்திலும் நடித்து வருகிறார்.
அரவிந்தசாமி, ரித்திகாசிங், சாந்தினி தமிழரசன், சிம்ரன், கணேஷ் வெங்கட்ராமன், தம்பிராமையா, உள்பட பலர் நடித்து வரும் 'வணங்காமுடி' படத்தை செல்வா இயக்கி வருகிறார். டி.இமான் இந்த படத்தின் இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com