விஜய், விஜய்சேதுபதி பட நாயகியின் தந்தை மறைவு: திரையுலகினர் இரங்கல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த படங்கள் உள்பட பல திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகையின் தந்தை காலமானதை அடுத்து திரையுலகினர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பா ரஞ்சித் இயக்கிய ’அட்டகத்தி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை நந்திதா ஸ்வேதா. அதன்பின் இவர் எதிர்நீச்சல், முண்டாசுப்பட்டி, இடம் பொருள் ஏவல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, புலி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது ’எம்ஜிஆர் மகன்’ உள்பட 5 படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நந்திதாவின் தந்தை சிவசாமி என்பவர் இன்று காலமானார். அவருக்கு வயது 54. இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள நந்திதா ஸ்வேதா, ‘என்னுடைய நலம் விரும்பிகள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால் என்னுடைய தந்தை சிவசாமி அவர்கள் இன்று காலமானார். அவருடைய ஆத்மா சாந்தி அடைய அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இதனை அடுத்து தந்தையை இழந்தை நந்திதாவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
sorry nandita his blessings ll always be ther for u.
— aishwarya rajesh (@aishu_dil) September 19, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments