விஜய், விஜய்சேதுபதி பட நாயகியின் தந்தை மறைவு: திரையுலகினர் இரங்கல்!

  • IndiaGlitz, [Monday,September 20 2021]

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த படங்கள் உள்பட பல திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகையின் தந்தை காலமானதை அடுத்து திரையுலகினர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பா ரஞ்சித் இயக்கிய ’அட்டகத்தி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை நந்திதா ஸ்வேதா. அதன்பின் இவர் எதிர்நீச்சல், முண்டாசுப்பட்டி, இடம் பொருள் ஏவல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, புலி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது ’எம்ஜிஆர் மகன்’ உள்பட 5 படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நந்திதாவின் தந்தை சிவசாமி என்பவர் இன்று காலமானார். அவருக்கு வயது 54. இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள நந்திதா ஸ்வேதா, ‘என்னுடைய நலம் விரும்பிகள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால் என்னுடைய தந்தை சிவசாமி அவர்கள் இன்று காலமானார். அவருடைய ஆத்மா சாந்தி அடைய அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இதனை அடுத்து தந்தையை இழந்தை நந்திதாவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

More News

ஐ.பி.எல்- கேப்டன் பதவியையும் துறந்த விராட் கோலி… ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!

ஐ.பி.எல் போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணியின் கேப்டனாகப் பதவி வகித்துவரும்

சி.எஸ்.கே சிங்கங்களா! செல்லங்களா? சிம்புவின் கொரோனா குமார் பாடல்!

நடிகர் சிம்பு நடிக்க இருக்கும் அடுத்த படமான 'கொரோனா குமார்' படத்தில் இடம் பெற்றுள்ள சி.எஸ்.கே சிங்கங்களா! செல்லங்களா! பாடல் ஒன்று சற்று முன் வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் தமிழ் சீசன் 5ல் நதியாவா?

பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி விரைவில் தொடங்க உள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் கசிந்து வருவதை அவ்வப்போது பார்த்து வருகிறோம்

தனுஷின் அடுத்த படத்தில் இணைந்த 'பீஸ்ட்' பிரபலம்: சம்பவம் நிச்சயம் இருக்கு?

தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மாறன்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது என்பதும் அதே போல் 'தி க்ரே மேன்' என்ற ஹாலிவுட் படத்திலும் அவர் நடித்து முடித்துள்ளார்

நீட் தேர்வு எழுதிவிட்டு மாயமான மாணவி காதலனுடன் தஞ்சமா?

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நீட் தேர்வு எழுதிய மாணவி ஒருவர் திடீரென மாயமானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் தற்போது அவர் காதலனிடம் தஞ்சம் அடைந்துள்ளதாக