close
Choose your channels

நமீதாவின் இரட்டை குழந்தைகள் பெயர் என்ன தெரியுமா? பெயர் சூட்டுவிழா புகைப்படங்கள்!

Tuesday, November 22, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகின் பிரபல நடிகையாக இருந்த நமீதாவின் இரட்டை குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் விழா சமீபத்தில் நடந்த நிலையில் இது குறித்த புகைப்படங்களை நமீதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.

அஜித், விஜய் நடித்த படங்கள் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நமீதா 2017 ஆம் ஆண்டு வீரேந்திர சவுத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு சமீபத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன என்பதும், கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்ததை நமீதா தனது சமூக வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் என்பதும் தெரிந்ததே.

அதன்பிறகு நமீதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தனது குழந்தைகளின் புகைப்படங்களை பதிவு செய்து வந்தார். இந்த நிலையில் நமீதா தனது இரட்டை குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் விழாவை அவரது சொந்த ஊரான சூரத் நகரில் நடத்தியுள்ளார். இதில் அவரது உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டுள்ளனர். நமீதாவின் குழந்தைகளுக்கு ’கிருஷ்ணா ஆதித்யா’ மற்றும் ’கியான் ராஜ்’ ஆகிய பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து நமீதா தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:

'

'கிருஷ்ணா ஆதித்யா' மற்றும் 'கியான் ராஜ்' !! இரண்டும் என்னுடைய அழகான அற்புதங்கள். எனக்கு கிருஷ்ணரால் பரிசளிக்கப்பட்ட மிகவும் விலையுயர்ந்த பரிசு! அதனால், என் குழந்தைகளுக்கு கிருஷ்ணரின் பெயரை வைக்க முடிவு செய்தேன். இந்த பெயரிடும் விழா எனது சொந்த ஊரான சூரத்தில் நெருக்கமான மற்றும் என் அன்புக்குரியவர்கள் மத்தியில் சிறப்பாக நடந்தது. உங்கள் அன்புக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி! என நமீதா தெரிவித்துள்ளார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment