திருப்பதியில் தரிசன ஏற்பாடுகள் சரியில்லை: நடிகை நமீதா பேட்டி!
Send us your feedback to audioarticles@vaarta.com
திருப்பதிக்கு கணவருடன் சுவாமி தரிசனம் செய்யச் சென்றிருந்த நடிகை நமீதா, திருப்பதியில் தரிசன ஏற்பாடுகள் சரியில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.
நடிகை நமீதா அவ்வப்போது தனது கணவருடன் திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளதை எடுத்து மீண்டும் திருப்பதியில் சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதால் கணவர் வீரேந்திர சவுத்ரியுடன் சமீபத்தில் நடிகை நமீதா திருப்பதி சென்றார்.
திருப்பதி திருமலையில் விஐபி தரிசனத்தில் சென்று ஏழுமலையானை தரிசனம் செய்த நமீதாவுக்கு வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓதி, நமிதா மற்றும் அவரது கணவருக்கு ஆசி வழங்கினார்கள். மேலும் லட்டு, தீர்த்த பிரசாதம் ஆகியவற்றையும் அர்ச்சகர்கள் வழங்கினார்.
இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்து விட்டு வெளியே வந்து செய்தியாளை சந்தித்த நமீதா, ‘நீண்ட நாட்களுக்கு பிறகு ஏழுமலையானை தரிசனம் செய்தது மகிழ்ச்சியாக இருந்தது என்றும் ஆனால் அதே நேரத்தில் தரிசனம் ஏற்பாடுகள் சரியில்லை என்றும் கூறினார். கடந்த முறை வந்த போது தரிசனம் செய்ய ஏற்பாடுகள் சிறப்பாக இருந்தது என்றும் அதே போல் மாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments