என் முதல் படத்துல இருந்த 2 பேரும் இப்ப உயிரோட இல்லை.. விஜயகாந்த் குறித்து நமீதா..!

  • IndiaGlitz, [Friday,December 29 2023]

நடிகை நமீதா தமிழில் விஜயகாந்த் நடித்த ’எங்கள் அண்ணா’ என்ற திரைப்படத்தில் அறிமுகமான நிலையில் அந்த படத்தில் தன்னுடன் பணிபுரிந்த இரண்டு பேருமே தற்போது உயிரோடு இல்லை என்பது தனக்கு மிகுந்த அதிர்ச்சியை அளிப்பதாக நமீதா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்

நான் ’எங்கள் அண்ணா’ திரைப்படத்தில் தான் அறிமுகமானேன். அந்த படத்தில் விஜயகாந்த் மற்றும் டைரக்டர் சித்திக் ஆகிய இரண்டு பேருமே எனக்கு பெரும் உதவி செய்தனர். அவர்கள் இருவரும் இல்லை என்றால் அந்த படத்தில் நான் நடிக்க மிகவும் கஷ்டப்பட்டு இருப்பேன். குறிப்பாக என்னை அறிமுகம் செய்தது விஜயகாந்த் என்று தான் சொல்ல வேண்டும்.

என்னை புதுமுக நடிகையாகவே யாரும் நினைக்கவில்லை அந்த அளவுக்கு எனக்கு ஆதரவாக இருந்தனர். இந்த வருடம் இயக்குனர் சித்திக் காலமானார், இப்போது கேப்டன் விஜயகாந்த் காலமாகியுள்ளார், என்னுடைய முதல் படத்தின் இரண்டு தூண்களும் தற்போது இல்லை என்பது என் இதயத்தை கனக்க செல்கிறது.

கேப்டனுடைய குணத்தை பக்கத்திலிருந்து நான் பார்த்த வியந்து இருக்கிறேன், இன்று அவர் இல்லை என்பது மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என்று நமீதா தெரிவித்துள்ளார்.

Immerse Yourself in the Melodies of Vijayakanth!

Dive into the soulful tunes and timeless classics by Vijayakanth. Click the link below to access a curated compilation of his greatest hits!

Listen Now